ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கொத்தாக சாவி எடுத்துச்சென்று பைக் திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய காட்சி! புதுச்சேரியில் பயங்கரம்!

கொத்தாக சாவி எடுத்துச்சென்று பைக் திருட்டு.. சிசிடிவியில் சிக்கிய காட்சி! புதுச்சேரியில் பயங்கரம்!

பைக்கை திருடி சென்ற மர்மநபர்

பைக்கை திருடி சென்ற மர்மநபர்

Puducherry bike theft | கொத்து சாவி போட்டு கூலாக ஒரு மணி நேரம் முயற்சித்து பைக்கை லாவகமாக திருடி சென்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரி கடற்கரையையொட்டி அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஊழியரின் இருசக்கர வாகனம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சிறுவந்தாடு பகுதியை சேர்ந்தவர் அர்ஜுன். இவர் புதுச்சேரி கடற்கரை பகுதியை ஒட்டி உள்ள தனியார் ஹோட்டலில் ஸ்டோர் பாதுகாவலராக இருந்து வருகிறார். இவர் நேற்று காலை 9 மணி அளவில் வேலைக்கு சென்றுள்ளார். பின்பு வேலை முடிந்து 7 மணி அளவில் வீட்டிற்கு செல்வதற்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திய இடத்தில் தேடி உள்ளார்.

அப்போது இருசக்கர வாகனம் இல்லை என்பதை கண்டு  அதிர்ச்சி அடைந்தார். அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்த அவர் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் யாரேனும் எடுத்து உள்ளார்களா என்று தேடி பார்த்தார். அதில், இளைஞர் ஒருவர் தொப்பி அணிந்து கொண்டும், முகக்கவசம் அணிந்து படி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இருசக்கர வாகனத்தில் மேல் அமர்ந்து அவர் வைத்திருந்த பல்வேறு சாவிகள் மூலம் ஒவ்வொன்றாக திறந்து பார்த்தது பதிவாகியிருந்தது.

' isDesktop="true" id="878496" youtubeid="lJ0cw7pL5nI" category="puducherry">

ஒரு கட்டத்தில் ஒரு சாவி பூட்டை திறந்ததால், அதன் பிறகு லாவகமாக இரு சக்கர வாகனத்தை எடுத்து சென்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்மநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Bike Theft, Crime News, Puducherry, Tamil News