ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பந்த், கல்வீச்சு எதிரொலி : தமிழகம் - புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தம்?

பந்த், கல்வீச்சு எதிரொலி : தமிழகம் - புதுச்சேரி பேருந்துகள் நிறுத்தம்?

பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

Puducherry |புதுச்சேரி- விழுப்புரம் மார்க்கத்தில் 2 தமிழக அரசு பேருந்துகள், ஒரு தனியார் சொகுசு பேருந்து உள்ளிட்ட 4 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தமிழகம் மற்றும் புதுச்சேரி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry) | Tamil Nadu

  புதுச்சேரியில் 4 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்ட நிலையில், விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தமிழகம் மற்றும் புதுச்சேரி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  இந்துக்களை அவமதித்து பேசியதாக திமுக எம்பி ஆ. ராசாவை கண்டித்து புதுச்சேரியில் இன்று இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

  புதுச்சேரியில் அண்ணா சாலை, நேரு வீதி, காமராஜர் வீதி, மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் மூடி உள்ளன.

  பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக மற்றும் புதுச்சேரி அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.

  முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பேருந்து நிலையம், முக்கிய சாலை சந்திப்புகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயங்கவில்லை.இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடியுள்ளது.

  ALSO READ | கள்ளத்தொடர்பால் விபரீதம்.. மருமகளை கொலை செய்த மாமனார் கைது

  இந்த நிலையில்புதுச்சேரி- விழுப்புரம் மார்க்கத்தில் இரண்டு தமிழக அரசு பேருந்துகள், ஒரு தனியார் சொகுசு பேருந்து உள்ளிட்ட 4 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டது. இதைதொடர்ந்து விழுப்புரம் மார்க்கமாக செல்லக்கூடிய தமிழகம் மற்றும் புதுச்சேரி பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  மேலும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக நகரில் அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. சிறிய கடைகளும்  மூடப்பட்டுள்ளதால் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலாண்டு காரணமாக அரசு பள்ளிகள் மட்டும் இயங்கின. கல்லூரிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டன. இதனால், புதுச்சேரி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Bandh, Crime News, Pondicherry, Protest, Puducherry