ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கனடா வேலை.. புதுச்சேரி இளம்பெண்ணிடம் ரூ.36 லட்சம் சுருட்டல்.. சிக்கிய வெளிநாட்டு கும்பல்

கனடா வேலை.. புதுச்சேரி இளம்பெண்ணிடம் ரூ.36 லட்சம் சுருட்டல்.. சிக்கிய வெளிநாட்டு கும்பல்

கைதானவர்கள்

கைதானவர்கள்

Crime News : கனடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி புதுச்சேரியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்த உகாண்டா நாட்டை சேர்ந்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 25 வயது பெண் வெளிநாட்டில் வேலை தேடி ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். கடந்த டிசம்பர் 2ம் தேதி இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் உயர் அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, 'உங்களுக்கு கனடாவில் வேலை தயாராக இருக்கிறது' என தெரிவித்துள்ளார். அதன்பின்பு வேறு இரு நபர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, போலியாக உருவாக்கப்பட்ட பணி ஆணையை தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, வேலைக்கான டெபாசிட், விசாவிற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி சிறுசிறு தவணைகளாக ரூ.36 லட்சத்தை  வெவ்வேறு வங்கி கணக்குகள் மூலம் பெற்றனர். மேலும், கனடா நாட்டில் வேலை என கொடுக்கப்பட்ட ஆணையை சரிபார்த்தபோது, அது போலியானது என தெரிந்தது.

இதைத்தொடர்ந்து இளம்பெண் புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக இந்த வழக்கில் நைஜிரியா நாட்டை சேர்ந்த ரூபன் குட்நியூஸ் நாயிமிகா(28) என்பவர் கடந்த டிசம்பர் 5ம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைத்தொடர்ந்து, மர்ம நபர்கள் இ-மெயில் அனுப்பிய ஐ.பி., முகவரியை கொண்டு விசாரணை நடத்தினர். அதில், பெங்களூரில் இருந்து இ-மெயில் அனுப்பியது தெரியவந்தது.

Also Read:  திருடுவதற்கு பஸ்சில் மட்டுமே போகும் கொள்ளையன்.. சிக்கும் பணத்தில் துணை நடிகைகளுடன் உல்லாசம் - பலே திருடன் கைது

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு உள்ளிட்ட போலீசார் பெங்களூர் விரைந்தனர். அங்கு, மறைந்திருந்த உகாண்டா நாட்டைச் சேர்ந்த நமேல் புரோசி(29) என்பவரை கைது செய்து அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தனர்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த, பெங்களூரை சேர்ந்த ராஜேஷ்(32) என்பவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

First published:

Tags: Crime News, Puducherry, Tamil News