ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

கனமழை எச்சரிக்கை - புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை எச்சரிக்கை - புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யும் என்ற சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பையொட்டி, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (3/11/2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை..

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெறிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேதி மற்றும் பகுதி வாரியாக மழைக்கான் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி,

    நாளைக்கு ஸ்கூல் லீவா? மழை பெய்யுமா? மாணவர்களுக்கு ஷாக் தந்த வெதர்மேன்.!

    03.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

    Published by:Murugadoss C
    First published:

    Tags: Chennai rains, Weather News in Tamil