ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

காவல்நிலையத்தில் கம்பி எண்ணும் 4 சேவல்கள் - என்ன காரணம் தெரியுமா?

காவல்நிலையத்தில் கம்பி எண்ணும் 4 சேவல்கள் - என்ன காரணம் தெரியுமா?

காவல்நிலையத்தில் இருக்கும் சேவல்கள்

காவல்நிலையத்தில் இருக்கும் சேவல்கள்

Puducherry| கடந்த 5 நாட்களாய் ஜாவா,கலிவா,கதிர்,யாகத் உள்ளிட்ட பெயர்கள் கொண்ட சேவல்கள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து பராமரிப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் சேவல் சண்டையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 சேவல்களை காவல்துறையினர் காவல்நிலையத்திற்கு எடுத்து சென்று பராமரித்து வருகின்றனர்.

புதுச்சேரி தேங்காய்திட்டில் பொங்கல் பண்டிகையன்று பந்தயம் வைத்து சேவல் சண்டை நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து முதலியார்பேட்டை போலீசார் விரைந்து சென்று பார்த்த போது  திலகர் நகரை சேர்ந்த சின்னதம்பி,பிரதாப் ஆகியோர் சேவல் பந்தயம் நடத்தியது தெரிய வந்தது. சண்டையில் எந்த சேவல் ஜெயிக்கும் என கேட்டு பந்தையமாக பணம் வைத்து ஒரு கூட்டமே விளையாடியுள்ளது.

சம்பவ இடத்திற்கு போலீசாரை கண்டவுடன் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் பந்தயம் நடத்திய சின்னதம்பி,பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டாலும் சேவல்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. 5 நாட்களாய் அவை முதலியார்பேட்டை காவல் நிலைய நுழைவு வாயிலில் கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாய் ஜாவா,கலிவா,கதிர்,யாகத் இவை வெறும் பெயர்கள் கொண்ட சேவல்கள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் இவை கம்பி எண்ணி கொண்டிருக்கின்றன.

சேவல்களூக்கு நீரும் தீனியும் வைத்து காவல்துறையினர் பராமரித்து வருகின்றனர்.காரணம் சேவல்களுக்கு எந்த ஆபத்து வந்தாலும் வழக்கு போலீஸ் பக்கம் திரும்பும் என்பதால் சட்டம் ஒழுங்குடன் சேவல்களை பாதுகாக்கும் முதலியார்பேட்டை போலீசாருக்கு சேவல்கள் மிகப்பெரிய சவலாகி விட்டது.

First published:

Tags: Local News, Puducherry