Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து காரில் வீசி சோதித்த பிளஸ் 1 மாணவர்கள்.. புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்..!

யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து காரில் வீசி சோதித்த பிளஸ் 1 மாணவர்கள்.. புதுச்சேரியில் நடந்த பகீர் சம்பவம்..!

யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள்

யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள்

Youtube bomb : புதுச்சேரியில் யூடியூப் பார்த்து வெடிகுண்டு தயாரித்து காரில் வீசி சோதித்த பிளஸ் 1 மாணவர்கள் 6 மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி சாந்திநகர் விரிவு 2வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இருமுறை வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நின்ற பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி உருளையன்பேட்டை காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில இருந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாற்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது. மேலும், இது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த  கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்றதும், நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

இந்நிலையில், அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, கென்னடி  நகர், திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள் கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அதில் 4 பேரை போலீசார் நேற்றிரவே கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது.

வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2  வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றொரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதனையடுத்து 4 பேரையும் போலீசார் மீட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கூட்டாக  பார்த்து படிக்கும்போது ஜாலிக்காக வெடிகுண்டு தயாரித்த சிறுவர்கள்  இன்று சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியில் ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Puducherry