ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அழியும் விலங்குகளை கண்முன்னே கொண்டு வந்த கலைஞர்கள்.. தத்ரூப காட்சியால் பிரமித்த மக்கள்!

அழியும் விலங்குகளை கண்முன்னே கொண்டு வந்த கலைஞர்கள்.. தத்ரூப காட்சியால் பிரமித்த மக்கள்!

விலங்குகள் சிலை

விலங்குகள் சிலை

Puducherry statues | தத்ரூபமாக வடிவமைக்கப்படும் விலங்குகளுடன் பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி அடைகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் தயாராகிய 100 விலங்கு சிலைகள்  ஆந்திரா பூங்காவிற்கு  செல்கிறது.

புதுச்சேரி முருங்கம்பாக்கம் கிராமத்தில்  உள்ள கலை மற்றும் கைவினை கிராமத்தில் உள்ளூர் கலைஞர்களின் திறனை வெளி கொண்டு வரும் வகையில் அரங்குகள் அமைத்து கைவினை பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.

இங்கு சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் தனி அரங்குள்ளது. இதில், விலங்குகள் மற்றும் பறவைகளின் சிலைகள் தத்ரூபமாக  காட்சி வைக்கப்பட்டுள்ளது. இயற்கை மற்றும் அழிந்து வரும் வனவிலங்குகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அரங்க அமைக்கப்பட்டுள்ளது.

ஏராளமான காடுகளும் அதனுடைய உயிரினங்களும் அழிந்துவிட்டன. அவற்றை மீட்டு எடுக்கும் முயற்சியாக  சிலைகள் உருவாக்கப்படுகின்றன.முழுக்க முழுக்க உள்ளூர் கலைஞர்களை கொண்டு தயாராகும் புலி,  மான்,பாம்பு, மயில், பறவைகள் போன்றவை அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது.

இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 ஆர்டர்கள் மட்டுமே கிடைத்த நிலையில், தற்பொழுது  15க்கு மேற்பட்ட ஆர்டர்கள் குவிந்துள்ளன.  இதனால் இரவு பகலுமாக  கலைஞர்கள் ஆர்வத்துடன் சிலைகளை  உற்பத்தி செய்து வருகின்றனர்.

ALSO READ | அவதார் கேரக்டர்களாக மாறிய தியேட்டர் ஊழியர்கள்.. புதுச்சேரியில் சுவாரஸ்யம்!

இந்தியாவில் உள்ள அனைத்து மிருகங்களின் சிலைகள் இங்கு வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்பொழுது உள்ள மிருகங்கள் பறவைகளை பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விலங்குகளின் சிலைகள் ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகம்  போன்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்பொழுது தயாராகியுள்ள  100 சிலைகள் ஆந்திராவில் உள்ள நகர்வள பூங்காவில் வைக்கப்பட இருக்கின்றன. முருகப்பாக்கம் கைவினை கிராமத்துக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த வனவிலங்குகளின் சிலைகள் முன்பு நின்று செல்ஃபி எடுத்து சிலைகளை வாங்கி செல்கின்றனர்.

செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி.

First published:

Tags: Andhra Pradesh, Animals, Park, Puducherry