ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மாண்டஸ் புயல் காரணமாக 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த புதுச்சேரி

மாண்டஸ் புயல் காரணமாக 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த புதுச்சேரி

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

பள்ளி கல்லூரிகள் விடுமுறை

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்ட்தின் 8 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு 9மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு தேதிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சென்னை , திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பின் அறிவுறத்தலை தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நாளைதான் சம்பவம்.. வட தமிழகத்தின் வெதர் இப்படிதான் இருக்கும் - அலர்ட் கொடுத்த வெதர்மேன்

மேலும் கனமழை எச்சரிக்கை மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் புதுச்சேரி -ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கவுள்ள நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

First published:

Tags: Cyclone Mandous, Pudhucherry