முகப்பு /செய்தி /புதுச்சேரி / அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு -  மூட்டை கட்டி தலையில் தூக்கி சென்ற இளைஞர்.. போலீசில் சிக்கினார்

அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் திருட்டு -  மூட்டை கட்டி தலையில் தூக்கி சென்ற இளைஞர்.. போலீசில் சிக்கினார்

கணினி திருடிய நபர் கைது

கணினி திருடிய நபர் கைது

புதுச்சேரியில் அரசு பள்ளியில் கணினி திருடி விளம்பர தொழில் செய்ய திட்டமிட்டு இருந்த இளைஞர் கணினியுடன் சிக்கினார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி  திருவண்டார் கோயில் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் திருடப்பட்டிருந்தன. இதுகுறித்து பள்ளி துணை முதல்வர் சாந்தா தேவி திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.  புகாரை பெற்றுக் கொண்ட போலீசார்  திருடிச் சென்ற மர்ம  நபர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் திருபுவனை போலீசார்  வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்டார் கோயில் கடைவீதியில் சாக்குப் பையில் மூட்டை கட்டிக்கொண்டு தலையில் தூக்கி சென்றவாறு இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அழைத்து சாக்கு முட்டையை அவிழ்த்து பார்த்தபோது அதில் ஒரு கம்ப்யூட்டர் இருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: சிசிடிவி காட்சியில் தெரிவது நான் இல்லை' - கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி பரபரப்பு வாக்குமூலம்!

உடனடியாக அந்த இளைஞரை திருபுவனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது முன்னுக்குப்பின்` முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர் அவர் திருவண்டார்கோயில் சின்ன பேட் பகுதியை சேர்ந்த 19 வயதான செல்வா  என்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்யப்பட்டதில் அவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கம்ப்யூட்டரை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.

அவருடைய வீட்டில் இருந்து இரண்டு மானிட்டர்கள் இரண்டு சிபியூ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து வேறு ஏதேனும் திருட்டில் ஈடுபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Crime News, Pudhucherry