ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால், அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால், அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆதங்கம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை என்றும், இதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே தீர்வு எனவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தங்களால், அவர்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த கோரிக்கையை முன்னிறுத்தி, சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சமூக அமைப்பினர், சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, தனி மாநில அந்தஸ்து பெற சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கோரினர்.

இதுதொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தையும் கூட்ட முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்களிடம் பேசிய முதலமைச்சர், உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை என்றும், இதற்கு மாநில அந்தஸ்து தான் ஒரே தீர்வு எனவும் தெரிவித்தார். மேலும், அரசு ஊழியர்கள் சம்பந்தமான ஒரு பணியை செய்து கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவு வருகிறது.

இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி நியமனங்கள் போதுமானவையல்ல.. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ஆனால், அந்த பணியை செய்து கொடுக்காமல் இருக்க என்னென்ன வழிகள் உள்ளதோ அதை அதிகாரிகள் தேடிக்கண்டு பிடிப்பதாக குற்றம் சாட்டினார். இதனால், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட தங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என ஆதங்கம் தெரிவித்தார்.

First published:

Tags: Puducherry