ஹோம் /நியூஸ் /Puducherry /

பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா- அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் குழப்பமா- அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்

புதுவை ஆய்வு கூட்டம் - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுவை ஆய்வு கூட்டம் - உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். அவர் முதலில் அவருடைய கட்சியில் இருக்கும் பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டும். எங்கள் கூட்டணி அரசை குறை சொல்வது நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரி போக்குவரத்து சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறையில் முக்கிய முடிவுகள் செய்வதற்கான ஆய்வு கூட்டம் டிஜிபி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், டிஜிபி ரன்வீர் சிங் கிருஷ்ணியா, ஐ.ஜி சந்திரன், மற்றும் முதுநிலை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதுச்சேரியில் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான  முடிவுகள் எடுக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், " புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாகவும் இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது” எனவும் கூறினார்.

மேலும், “ சட்ட ஒழுங்கு பிரச்சனை, போதைப் பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்துவது குறித்தும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தொடர்ந்து கண்காணிக்க இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நடைமுறைகளை உடனடியாக செயல்படுத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Also see... இரட்டை இலை சின்னத்தை முடக்க தேர்தல் ஆணையத்தில் முறையிடவில்லை...

அதனைத் தொடர்ந்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த அவர், ” துணைநிலை ஆளுநரை எங்கள் துறை சம்பந்தமான திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக மட்டுமே சந்தித்தோம். வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லை. முதலமைச்சர் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை. புதுச்சேரி அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் முன்னாள் முதல்வர் நாராயணசாமி எங்கள் அரசின் மீது பல்வேறு குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார். இதனை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் ” என்றார்.

மேலும், “காங்கிரஸ் கட்சியில் அவரை எந்த நிகழ்வுக்கும் பங்கேற்க கூடாது என்று கட்சி மேலிடத்தில் அவருடைய நிர்வாகிகள் தெரிவித்து வரும் நிலையில் முதலில் அவருடைய கட்சியில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Narayana samy, Pondicherry, Puducherry