ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் முதல் முறையாக கடலில் பயணிகள் படகு சேவை.. குவியும் சுற்றுலா பயணிகள்..

புதுச்சேரியில் முதல் முறையாக கடலில் பயணிகள் படகு சேவை.. குவியும் சுற்றுலா பயணிகள்..

படகு சேவை

படகு சேவை

Puducherry Boat Ride | தினமும் காலை மாலை என இரண்டு தடவை இயக்கப்படும் இந்த படகில் பயணிக்க முன் பதிவு அவசியமாகின்றது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரியில் முதல்முறையாக சுற்றுலாவினர்கள் கடல் அழகை ரசிக்கும் வகையில் தனியார் மூலம் பயணிகள் படகு சேவை இன்று தொடங்கியது.

கொரோனா நோய் தொற்று பெரும் அளவில் குறைந்து விட்டது. இதனால் சர்வதேச சுற்றுலா நகரமான புதுச்சேரியில் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் வரத்துவங்கி விட்டனர். புதுச்சேரியின் அழகை கரையில் இருந்து பார்க்கும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க கூடுதலாக ஒரு சேவை துவங்கப்பட்டுள்ளது.

கடலில் இருந்து புதுச்சேரியை பார்க்கும்  வகையில் முதல்முறையாக தனியார் மூலம் படகில் பயணிகளை அழைத்து சென்று பார்க்கும் சேவை இன்று துவங்கியது. கடலில் இருந்து புதுச்சேரி நகரின் அழகை காணும் வகையில் முதல் சொகுசு  படகு பயணம் எக்ஸ்போ கிரவுண்ட்டில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறது.

படகில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.

புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறையுடன் இணைந்து தனியார் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள இந்த படகில் பயணிக்க ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இந்த படகு புதுச்சேரியின் பாரம்பரிய கடற்கரை, பாண்டி மெரினா, பாரடைஸ், நீலம், ரூபி உள்ளிட்ட பல்வேறு கடற்கரைகள் வழியாக பயணித்து நல்லவாடு வரை 3 மணி நேரம் பயணித்து சுற்றுலாவினர்கள் அதன் அழகை காணும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினமும் காலை மாலை என இரண்டு தடவை இயக்கப்படும் இந்த படகில் பயணிக்க முன் பதிவு அவசியமாகின்றது. வார இறுதி நாட்களில் பல்வேறு மாநிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாவினர்களுக்கு இந்த படகு பயணம் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

புதுச்சேரியில் ஏற்கனவே சுண்ணாம்பாறு படகுத்துறையில் அரசு மூலம் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது. இதேபோல் ஊசுடு ஏரியில் சுற்றுலாத்துறை மூலம் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது. முதல் முறையாக கடல் வழியே படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry