ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் கைதிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனம்...

புதுச்சேரியில் கைதிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனம்...

கைதிகளுக்கு விவசாய இயந்திரங்கள்

கைதிகளுக்கு விவசாய இயந்திரங்கள்

Puducherry News : புதுச்சேரியில் கைதிகளுக்கு விவசாய இயந்திரங்கள் வழங்கிய தனியார் நிறுவனம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி கைதிகளுக்கு யோகா, தியானம், ஓவியம், சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும், விளையாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும் சிறைச்சாலை வளாகத்தில் கைதிகளால் 3 ஏக்கரில் இயற்கை விவசாயப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

60 வகையான பழங்கள், மூலிகை காய்கறிகள் என ஏராளமான செடிகள் நட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர உரம் மற்றும் பூச்சிக்கொல்லி தயாரிக்க சிறை வளாகத்தில் ஆடு, மாடு மற்றும் முயல்கள் வளர்க்கப்படுகின்ற இதன் ஒரு பகுதியாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 75 வகையான அரிய வகை மூலிகை செடிகள் பயிரிட நடவடிக்கை எடுக்கப்பட்டு மூலிகைச் செடிகள் பயிரிடப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க : 3 வயது குழந்தையின் உயிரை பறித்த எலி பேஸ்ட்.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்...

சிறை துறையின் செயல்பாடுகள் குறித்து அறிந்த தனியார் நிறுவனம் விவசாயத்திற்கு தேவையான கலப்பை கருவி நவீன ரக தெளிப்பான் மற்றும் புல் வெட்டும் கருவிகள் ஆகிய விவசாய இயந்திரங்களை வழங்கும் நிகழ்ச்சி சிறை வளாகத்தில் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதில் சிறைத்துறை தலைவர் ரவி தீப் சிங் சாகர் தலைமை கண்காணிப்பாளர் அசோகன் சிறைத்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோரிடம் வழங்கினார். மேலும் வழங்கப்பட்ட விவசாய இயந்திரங்களை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து சிறை கைதிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

First published:

Tags: Local News, Puducherry