ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் செவ்வாய்கிழமை மின்தடை : எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் செவ்வாய்கிழமை மின்தடை : எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Puducherry Power Cut |

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியின் முக்கிய பகுதிகளில் செவ்வாய்கிழமை 4 மணிநேர மின் தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி லாஸ்பேட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 24-01-2023 செவ்வாய்கிழமை காலை 10 மணியிலிருந்து மாலை 2 மணி வரை கீழ்க்குறிப்பிடப்படும் பகுதிகளில், அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் மின் விநியோகம் முற்றிலும் தடைபடுமென்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

அதன் விபரம் பின்வருமாறு: - குறிஞ்சி நகர் விரிவாக்கம், புதுப்பேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட்டை ஒரு பகுதி, நெருப்புக்குழி, அசோக் நகர், இலாசுபேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, சாந்தி நகர், வள்ளலார் நகர், கலைவாணி நகர், ஆனந்தா நகர், நெசவாளர் நகர், லஷ்மி நகர், லஷ்மி நகர் விரிவாக்கம், வரதராஜாபிள்ளை நகர், மேயர் நாராயணசாமி நகர், சப்தகிரி நகர், இடையன்சாவடி ரோடு. லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள், பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட், மேட்டுப்பாளையம் டிரக் முனையம், பிரியதர்ஷினி நகர். ராஜா அண்ணாமலை நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர். ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, மதர்தெரசா நர்சிங் கல்லூரி, தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் பகுதிகளில் மின்தடை இருக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வைநகர் ஒரு பகுதி, நெருப்புகுழி, நாவற்குளம், Dr.அன்னிபெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், பொதிகை நகர், தில்லைகன்னு அம்மா நகர் ஆகிய பகுதிகளில் 4 மணிநேர மின்தடை ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Power cut, Puducherry