முகப்பு /செய்தி /புதுச்சேரி / பிரபல ரவுடி ஓரின சேர்க்கையாளர் அபினேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது...

பிரபல ரவுடி ஓரின சேர்க்கையாளர் அபினேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது...

கைது செய்யப்பட்ட 3 பேருடன் போலீசார்.

கைது செய்யப்பட்ட 3 பேருடன் போலீசார்.

சோலைநகரில் கீழ் தளத்தில் வசித்து வந்த  அபினேஷ் மேல்தளத்தில் வசித்த மீனவர் வின்னரசன் என்பவரது 7 வயது மகனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

  • Last Updated :

பிரபல ரவுடியான ஓரினச்சேர்க்கையாளர் அபினேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கியது 13 வயது சிறுவன் தேவன் ராஜ்  என்பவனை ஓரினச்சேர்க்கை செய்ய கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை செய்து அவனை கொன்று புதைத்த சம்பவம்.

போலீசார் விசாரணையில் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கலைமணி மீனவரான இவரது மகன் அபினேஷ் (வயது 22) தேவன் ராஜை ஓரினச்சேர்க்கை செய்து கொன்று புதைத்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ரீனேஷ் (வயது 12) அவரையும் ஓரின சேர்க்கை செய்து கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கொலை செய்யப்பட்ட ரவுடி அபினேஷ்

மேலும் சிறையில் இருந்து வந்த  அபினேஷ் புதுச்சேரி சோலை நகர் பகுதியில் குடியிருந்தார்.  திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் அவர் மீது நிலுவையில் உள்ளது.

இதையும் படிங்க - மெடிக்கல் காலேஜ் தான் டார்க்கெட்.. டைம்டேபிள் போட்டு திருடி வந்த இளைஞர் - சுவாரஸ்ய பின்னணி

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் குத்தி  கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க - Iridium | பவர்ஃபுல் இரிடியம்.. அலுமினிய குண்டானை காட்டி லட்சங்களில் மோசடி - அதிர்ச்சி சம்பவம்

வழக்கு விசாரணையில் சோலைநகரில் கீழ் தளத்தில் வசித்து வந்த  அபினேஷ் மேல்தளத்தில் வசித்த மீனவர் வின்னரசன் என்பவரது 7 வயது மகனுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதை தட்டி கேட்ட சிறுவனின் சித்தப்பா கலையரசன் கடந்த 4ம் தேதி மிரட்டியுள்ளார்.

மறுநாள் 5 ம் தேதி அவர் சோலை நகர் கடலில் இறந்து கிடந்தார். அபினேஷ் தான் கொன்றிருக்கவேண்டும் என ஊர்மக்கள் சந்தேகப்பட்டனர். இதில் ஆத்திரமடைந்த வின்னரசனின் உறவினர் சத்தீஷ் தனது நண்பர்கள் அப்பு, அஜீத் ராஜ், அகமது அசேன், அரவிந்த் ஆகியோருடன் சேர்ந்த கோட்டக்குப்பம் மரைக்காயர் தோப்பில் அபினேஷை மடக்கி குத்தி கொன்றுள்ளனர். இதனையடுத்து சத்தீஷ்(20),அஜீத் ராஜ்(22),அகமது அசேன் என 3 பேரை கைது செய்தனர்.

First published:

Tags: Crime News, Puducherry