ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் சாராய கடையை சூறையாடிய பெண்கள்.. தற்கொலை செய்வோம் என ஆவேசம்..

புதுச்சேரியில் சாராய கடையை சூறையாடிய பெண்கள்.. தற்கொலை செய்வோம் என ஆவேசம்..

மதுக்கடையை சூறையாடிய பெண்கள்

மதுக்கடையை சூறையாடிய பெண்கள்

Puducherry tasmac | 10 ஆண்டுகளாக மதுக்கடையை அகற்ற வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பிரச்சனையால் கடையை சூறையாடினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry

புதுச்சேரியில் கிராமத்து பெண்கள் ஒன்று சேர்ந்து சாராயக்கடையை அடித்து நொறுக்கினர்.

புதுச்சேரி - விழுப்புரம் எல்லை கிராமப் பகுதியான லிங்காரெட்டிபாளையத்தில் சாராயக்கடை உள்ளது. இந்தக் கடையை அகற்றக்கோரி 10 ஆண்டுகளாக அப்பகுதி பெண்கள் போராடி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை இரவு சாராய கடைக்கு வந்த சிலர் அப்பகுதியில் உள்ள பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை சாராயக்கடைக்குள் புகுந்து கடையை அடித்து நொறுக்கினர்.

இதில் கடையில் இருந்த சேர், பாட்டில்கள், சாராய பாக்கெட் தயாரிப்பதற்கான மூலப்பொருடகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. இப்பகுதியில் சாராயக் கடை தொடர்ந்து செயல்பட்டால் தற்கொலை செய்துகொள்ளவும் தயங்க மாட்டோம் என்று அப்பகுதி பெண்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

First published:

Tags: Puducherry, Tasmac