Home /News /puducherry /

பணி நிரந்தரம் செய்யக்கோரி ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் தர்ணா

பணி நிரந்தரம் செய்யக்கோரி ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் தர்ணா

ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் தர்ணா

ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் தர்ணா

Puducherry | பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் கல்வித்துறை நுழைவு வாயில் படிக்கட்டுகளில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :


பணி நிரந்தரம் செய்யக்கோரி புதுச்சேரி ரொட்டி பால் திட்ட ஊழியர்கள் கல்வித்துறை நுழைவு வாயில் படிக்கட்டுகளில் அமர்ந்து  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி கல்வித்துறையில் 2003-ம் ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டமான ரொட்டிப்பால் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் 822 பேர் ரொட்டிபால் திட்ட ஒப்பந்தஊழியர்களாக பணியமர்த்தப்பட்டனர்.


கடந்த 19 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கல்வித்துறை அலுவலக நுழைவாயில் படிக்கட்டுகளில் அமர்ந்து ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரி அரசைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.




600 ரூபாய் சம்பளத்தில் பணிக்கு அமர்த்தப்பட்ட தங்களுக்கு தற்போது தான் 6,000 சம்பளம் வழங்கப்படுகிறது. கடந்த 19 ஆண்டுகளாக பணிபுரியும் தங்களை புதுச்சேரி அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும், இல்லை என்றால்  தொடர்ந்து வேலைநிறுத்தத்தில்  ஈடுபட போவதாக ரொட்டி பால் ஊழியர்கள் தெரிவித்தனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Puducherry

அடுத்த செய்தி