ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

வியாபாரிங்க 5 ரூபாய்க்கு வாங்கி ரூ.40-க்கு விற்கிறாங்க.. எங்களுக்கு நஷ்டம் - மஞ்சள் சாகுபடியை கைவிடும் புதுச்சேரி விவசாயிகள்

வியாபாரிங்க 5 ரூபாய்க்கு வாங்கி ரூ.40-க்கு விற்கிறாங்க.. எங்களுக்கு நஷ்டம் - மஞ்சள் சாகுபடியை கைவிடும் புதுச்சேரி விவசாயிகள்

மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள்

மஞ்சள் சாகுபடியில் விவசாயிகள்

Pondicherry turmeric Harvest | தமிழகத்தைப் போல கரும்பு, மஞ்சள் போன்றவற்றை புதுச்சேரி அரசு கொள்முதல் செய்ய வேண்டும். செய்யாத காரணத்தினால் மஞ்சள் சாகுபடியை குறைத்து விட்டதாக  கவலை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry, India

புதுச்சேரியில் அரசு கொள்முதல் செய்யாத காரணத்தினால் மஞ்சள் சாகுபடியை விவசாயிகள் கைவிட்டு வருகின்றனர்.

புதுச்சேரியின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது.எந்த ஒரு அணையோ ஆறோ புதுச்சேரியில் இல்லை என்றாலும் 80 ஏரி,800 குளங்களில் தேங்கும் நிலத்தடி நீரை மட்டுமே விவசாயிகள் நம்பியுள்ளனர்.  இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான மஞ்சள், கருணைக்கிழங்கு, சிறுவள்ளி கிழங்கு போன்றவை புதுச்சேரியில் 60 ஏக்கருக்கும் மேற்பட்ட அளவில் பயிரிடப்படும்.ஆனால்  தற்போது 15 ஏக்கர் அளவிற்கு குறைந்து விட்டது.

மண்ணாடிப்பட்டு, செட்டிபட்டு, திருக்கனூர்,சோம்பட்டு, கூலிச்சம்பட்டு,சோரப்பட்டு,செட்டிப்பட்டு உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இவை பயிரிடப்படும். இரண்டு தலைமுறையாக 15 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வந்ததாக கூறும் விவசாயி பெரியண்ணன், மஞ்சளை கொள்முதல் செய்ய புதுச்சேரி அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பொங்கல் பண்டிகைக்கு மட்டும் ஐந்து ஏக்கர் அளவில் குறைந்து சாகுபடி செய்து உள்ளோம் என வேதனையாக தெரிவித்தார்.

ஒரு மஞ்சள் கொத்தை  ஐந்து ரூபாய்க்கு  வாங்கும் வியாபாரிகள் 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதனால் விவசாயிகளுக்கு தான் நஷ்டம் தமிழகத்தைப் போல கரும்பு, மஞ்சள் போன்றவற்றை புதுச்சேரி அரசு கொள்முதல் செய்ய வேண்டும். செய்யாத காரணத்தினால் மஞ்சள் சாகுபடியை குறைத்து விட்டதாக  கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தைப் போல புதுச்சேரி அரசும் பொங்கல் விளை பொருட்களை கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் கரும்பு, தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மானியம் வழங்குவது போல இவற்றுக்கும் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தை இவற்றிற்கும் நீட்டிக்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளும் ஒட்டுமொத்த கோரிக்கை.

First published:

Tags: Puducherry, Tamil News, Turmeric