ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட்டம்.. குவிந்த மக்கள்!

புதுச்சேரி கடற்கரையில் காணும் பொங்கல் கொண்டாட்டம்.. குவிந்த மக்கள்!

கடற்கரையில் குவிந்த மக்கள்

கடற்கரையில் குவிந்த மக்கள்

Puducherry kanum pongal celebration | புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

காணும் பொங்கலையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை, பாரதி பூங்கா,தாவரவியல் பூங்கா என அனைத்து சுற்றுலா தளங்களிலும் மக்கள் குவிந்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான இன்று காணும் பொங்கல். இதனை கொண்டாடும் வகையில் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் காலை முதல் சுற்றுலா தளங்களில் குவிந்துள்ளனர். கடற்கரை சாலை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா,நோணாங்குப்பம் படகு துறை என அனைத்து இடங்களிலும் மக்கள் கூடியுள்ளனர்.

தங்களது வீடுகளில் தயாரித்த உணவுகளை கொண்டு வந்து குழுவாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். குழந்தைகள் அனைவரும் பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.

கடற்கரையில் இறங்கி கால் நனைத்து சுற்றுலா பயணிகளும் உள்ளூர் மக்களும் மகிழ்ந்தனர். ஆனால் போலீசாரோ,  ‘கடல் குளிப்பதற்கு உகந்த நிலையில் இல்லை’ என பொதுமக்களை எச்சரித்து  அனுப்பினார்கள்.

நோணாங்குப்பம் படகு துறையில் பொங்கல் விடுமுறை நாட்களில் 32 லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலாகியுள்ளது.  காணும் பொங்கலை யொட்டி கடற்கரை சாலை, தாவரவியல் பூங்கா, படகுத்துறை போன்ற சுற்றுலாதலங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

First published:

Tags: Pongal 2023, Public, Puducherry