முகப்பு /செய்தி /புதுச்சேரி / 3 நாட்களில் 2 காவலர்கள் தற்கொலை.. அடுத்தடுத்த சம்பவங்களால் ஷாக்கில் புதுச்சேரி காவல்துறை..

3 நாட்களில் 2 காவலர்கள் தற்கொலை.. அடுத்தடுத்த சம்பவங்களால் ஷாக்கில் புதுச்சேரி காவல்துறை..

தற்கொலை செய்த காவலர்கள்

தற்கொலை செய்த காவலர்கள்

Puducherry Suicide | புதுச்சேரியில் வெவ்வேறு காரணங்களுக்காக 3 நாட்களில் அடுத்தடுத்து 2 காவலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry) | Puducherry (Pondicherry)

புதுச்சேரியில் 3 நாட்களில் இரு காவலர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது காவலர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மடுகரை இந்திரா நகரை சேர்ந்தவர் மலையராஜ் (48) . கோரிமேடில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும், கல்லூரி படிக்கும் இரண்டு மகன்களும் உள்ளனர், மலைராஜ் கடந்த 8 ஆண்டுகளாக சர்க்கரை நோயால அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் அவரது காலில் புண் ஏற்பட்டு அது ஆறாமல் மீண்டும் மீண்டும் வலியை தந்துள்ளது.

இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மருத்துவ விடுப்பு எடுத்தார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் காலை எடுக்க வேண்டும் என கூறியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்தவர் இன்று அதிகாலை வீட்டின் வெளியே போடப்பட்டிருந்த இரும்பு ஷெட்டில் மனைவியின் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிகிழமை மதியம் பணி முடித்து வீடு சென்ற  சென்ற தன்வந்தரி நகர் காவலர் நாகராஜ் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபமடைந்து வீட்டின் பின்புறம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தன்வந்தரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.3 நாட்களில் இரு காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Police, Puducherry, Suicide