ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

ஆளுநர் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் வந்துவிடும் - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

ஆளுநர் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் வந்துவிடும் - தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

கவர்னர் தமிழிசை

கவர்னர் தமிழிசை

"பிரசவத்தின் போது இரட்டை குழந்தைகள் பிறந்தால் என்னால் பார்க்க முடியும். அதேபோல்தான் ஆளுநர், துணைநிலை ஆளுநர் பதவிகளை பார்க்கிறேன்"

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  ஆளுநர்கள் மக்களைச் சந்தித்தால் அரசியல்வாதிகளுக்குக் குளிர் ஜுரம் வந்துவிடுவதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் விமர்சித்துள்ளார்.

  புதுச்சேரிக்கு கல்விச் சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ் நர்சீ பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு  துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

  அப்போது பேசிய அவர், “ஆளுநர் என்றால் வயதானவர் என குழந்தைகள் மனதில் பதிந்துள்ளது. விமான நிலையத்தில் நான் தான் தெலுங்கானா ஆளுநர் என கூறியும் ஒரு குழந்தை நம்பவில்லை. பின்னர் என்னுடன் அந்த குழந்தை புகைப்படம் எடுத்த போது தானும் ஆளுநராக வரவேண்டும் என விருப்பத்தை தெரிவித்தார். உயர்ப்பதவிக்கு வர கல்வி மற்றும் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என கூறினார்.

  புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் இரு பதவிகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு மருத்துவரான தான்  பிரசவத்தின்போது இரட்டை குழந்தைகள் பிறந்தால் என்னால் பார்க்க முடியும். அதேபோல்தான் ஆளுநர், துணைநிலை ஆளுநர் பதவிகளை பார்க்கிறேன். இதை கூடுதல் வேலையாக கருதவில்லை.  மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.

  இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லா ஆளுநர்களும் அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆளுநர்களின் சின்ன சின்ன நடவடிக்கைகளைக்கூட விமர்சிப்பதற்கென்றே சில அரசியல்வாதிகள் கிளம்பியிருப்பதாகவும் தமிழிசை செளந்திரராஜன் விமர்சனம் செய்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Governor, Tamilisai Soundararajan