ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

தமிழக ஆளுநரை மாற்ற அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது - தமிழிசை

தமிழக ஆளுநரை மாற்ற அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது - தமிழிசை

தமிழிசை

தமிழிசை

Tamilisai Soundararajan | நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும். மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன் என்றார் துணைநிலைஆளுநர் தமிழிசை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. கடந்த மாதம் 8ம் தேதி நடந்த சந்திப்பின்போது போக்குவரத்துக்கு உதவியாக 3 சக்கர கைவண்டி வழங்கும்படி ஆளுநரிடம் மாற்றத்திறனாளி ஒருவர் கோரிக்கை வைத்தார்.

  இதையடுத்து இன்று நடந்த நிகழ்ச்சியில், மண்ணாடிப்பட்டு குமாரபாளையத்தை சேர்ந்த முருகன் என்ற மாற்றுத்திறனாளியிடம் 3 சக்கர வண்டியை தமிழிசை வழங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் சந்திப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம் கேட்டவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதுதான் மக்கள் சந்திப்பின் பலன். ஏன் மக்களை சந்திக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் மக்களை சந்திக்க வேண்டும் என கூறுபவர்களுக்கு இந்த செயல்தான் எனது பதில்.

  இது போல மக்களை சந்திக்கும் போது அவர்களது சிறிய-சிறிய தேவைகளை நமது நோக்கத்தினால், முயற்சியினால் ஓரளவு சரிசெய்ய செய்ய முடியும். எங்களால் உடனே சரி செய்துவிடக் கூடிய இன்னும் பல கோரிக்கைகளை சரி செய்துள்ளோம். ஜிப்மரில் கேட்ட உதவியை செய்துள்ளோம். மக்கள் சந்திப்பை அரசியல் ஆக்காமல் அவசியத்திற்காக, நல்ல மனது படைத்தவர்களால் செய்யப்படுகிறது என்பதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  நல்லது யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது தொடரும். மக்கள் சந்திப்பு அரசியல் கிடையாது, அவசியம் என்பதை நான் பதிவு செய்கிறேன் என்றார். தமிழக ஆளுநரை மாற்றம் செய்ய அரசியல் கட்சிகள் கையெழுத்து வாங்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் தமிழிசை தெரிவித்தார்.

  Published by:Selvi M
  First published:

  Tags: Puducherry Governor, Tamil News, Tamilisai Soundararajan