Home /News /puducherry /

ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது... சிசிடிவி காட்சியால் சிக்கினார்...

ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது... சிசிடிவி காட்சியால் சிக்கினார்...

புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது

புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட பணம் திருடிய காவலர் கைது

Puducherry | புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட இருசக்கர வாகனத்தில் பணம் திருடிய காவலரை போலீசார் கைது செய்தனர். காவலர் சீருடை அணிந்து கள்ளச்சாவி போட்டு வாகனத்தில் அவர் திருடிய சிசிடிவி காட்சியால் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும் ...
புதுச்சேரி சோலை நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் மகேஸ்வரி (41). இவர் காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள கண்காணிப்பாளர் சுபம் கோஷ் வீட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த 26 ம் தேதியன்று காவல் தலைமையகம் அருகில்  தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் கைப்பையை வைத்துவிட்டு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது  வாகன பெட்டியில் வைத்திருந்த கைப்பையில் ரூ.20,000 பணம் காணவில்லை.

இது குறித்து அவர் பெரியக்கடை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் காவலர் சீருடை அணிந்த நபர் ஒருவர் மகேஷ்வரி இருசக்கர வாகனத்தில் இருந்து பணம் திருடி செல்வது பதிவாகிருந்தது.

இதனையடுத்து நேற்று மாலை பாரதி பூங்கா அருகில் கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை கொண்ட ஒருவர் நடமாடிக் கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பெயர்  காளிதாஸ் (27) என்றும், ஐஆர்பிஎன் காவலர் என்றும் தெரிவித்ததை அடுத்து  அவரை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில்  இருசக்கர வாகன சாவிகளின் கொத்து இருந்தது.

போலீசார் இதெல்லாம்  எதற்கு என கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். உடனே அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மகேஸ்வரியின் வாகனத்தில் இருந்து ரூ.20,000 திருடியதை ஒப்புக்கொண்டார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பல ஆயிரங்களை இழந்துள்ளார். இருப்பினும் ஆன்லைன் ரம்மி ஆசை தீராத இவர் கையில் பணம் இல்லாததால் வாகனத்திற்கு கள்ளச்சாவி போட்டு பணம் திருடியதை ஒப்பு கொண்டார். இதனை தொடர்ந்து காளிதாஸை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Also see...வீர சாவர்க்கர் சுதந்திரப் போராட்ட வீரர்தான் - தமிழிசை

இவர் இதே போல்  இரண்டு முறை சிறிய திருட்டில் ஈடுப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இவரை பணியிடை நீக்கம் செய்ய காவல் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது..
Published by:Vaijayanthi S
First published:

Tags: CCTV Footage, Police arrested, Puducherry

அடுத்த செய்தி