Home /News /puducherry /

தொப்புள் கொடியுடன் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தை.. உரிமை கோரி வந்த தம்பதி

தொப்புள் கொடியுடன் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தை.. உரிமை கோரி வந்த தம்பதி

குழந்தையை குப்பைத் தொட்டியிலிருந்து மீட்ட போது எடுத்த புகைப்படம்

குழந்தையை குப்பைத் தொட்டியிலிருந்து மீட்ட போது எடுத்த புகைப்படம்

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பிறந்த 1 நாளே ஆன பச்சிளம் குழந்தை என்பதை தெரிவித்தனர். மேலும் குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை வீசிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
புதுச்சேரியில் தொப்புள் கொடியுடன்  கண்டெடுக்கப்பட்ட ஆண் குழந்தையை உரிமை கோரி காவல் நிலையம் வந்த தம்பதியிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு உட்பட கக்கிளப்பட்டு கிராமத்தின் ஆற்றங்கரையோரத்தில் சிவன் கோவில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 5ம் தேதி நள்ளிரவு அவ்வழியாக சென்ற போது குழந்தையின் அழுக்குரல் கேட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது துணியில் பச்சிளம் குழந்தை வீசப்பட்டிருப்பது  தெரியவந்ததை அடுத்து , திருக்கானூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை மீட்டு புதுச்சேரியில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் பிறந்த 1 நாளே ஆன பச்சிளம் குழந்தை என்பதை தெரிவித்தனர். மேலும் குழந்தை நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை வீசிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வந்தனர்.

இந்த நிலையில் 7 நாட்கள் கழித்து திருக்கனூர் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு தம்பதியர் குழந்தை தங்களுடையது என கூறியுள்ளனர். ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள அந்த பெண்ணுக்கு மூன்றாவது வீட்டிலேயே பிறந்த ஆண் குழந்தை அழாமல் இருந்தது. குழந்தை இறந்ததாக கருதி குப்பையில் போட்டுள்ள பெண் துணியை இடிப்பில் கட்டி கர்ப்பமாக இருப்பதாக நாடகமாடியுள்ளார்.

Also read... சதுரங்க வேட்டை பட பாணியில் பணம் இரட்டிப்பு.. ஆரணியில் ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனம் - ஆக்‌ஷனில் இறங்கிய வருவாய்துறை

தற்போது குழந்தை உயிருடன் இருப்பதை அறிந்து கணவனிடம் உண்மையை சொல்லி காவல் நிலையம் வந்துள்ளார். தற்போது காப்பகத்தில் உள்ள குழந்தை இவர்களுடையது தானா என விசாரணை நடத்தும் திருக்கனூர் போலீசார் இவ்வழக்கை  சட்ட ரீதியாக அனுக முடிவு செய்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Newborn baby, Puducherry

அடுத்த செய்தி