Home /News /puducherry /

மார்பகங்கள், அந்தரங்க உறுப்பில் நக கீறல்.. போதையில் மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை..

மார்பகங்கள், அந்தரங்க உறுப்பில் நக கீறல்.. போதையில் மகள்களுக்கே பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை..

 பெற்ற பெண் குழந்தைகளுக்கு போதையில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

பெற்ற பெண் குழந்தைகளுக்கு போதையில் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது

Puducherry | புதுச்சேரியில் பெற்ற பெண் குழந்தைகளுக்கு மது போதையில் பாலியல் தொல்லை கொடுத்த  தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் சரவணன் (30). பெயிண்டரான  இவருக்கு திருமணமாகி மனைவியும், 12 மற்றும் 10 வயதில் இரண்டு மகள்களும் உள்ளனர். மது பழக்கம் காரணமாக சரவணனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக சரவணனின் மனைவி கணவரிடம் பேசாமல் தனது தாயார் வீட்டில்  இருந்துள்ளார்.

இதனிடையே, சரவணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது பெண் குழந்தைகளின் அந்தரங்க உறுப்பு மற்றும் மார்பகங்களில் நக கீறல் காயங்கள் இருப்பதை கண்டு  குழந்தைகளிடம் இதுகுறித்து கேட்டபோது அவர்கள் தந்தை சரவணன் இரவில் தங்களிடம் தவறாக நடக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதில் அதி்ர்ச்சியடைந்த சரவணனின் மனைவி இது குறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  மத்திய சிறையில் அடைத்தனர்.

Also see...பெண் மீது போலீஸ் எஸ்.ஐ தாக்குதல்.. காவல் நிலையத்தில் பகீர் சம்பவம்.. வைரலாகும் வீடியோ

தந்தையே தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு  மதுபோதையில் பாலியல் தொல்லை  கொடுத்த  சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Crime News, Pocso, Puducherry, Sexual harassment

அடுத்த செய்தி