ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

லட்சுமி யானை நினைவாக புகைப்பட கண்காட்சி.. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் புதுச்சேரி மக்கள்..

லட்சுமி யானை நினைவாக புகைப்பட கண்காட்சி.. ஆர்வத்துடன் பார்த்து செல்லும் புதுச்சேரி மக்கள்..

லட்சுமி யானை நினைவாக புகைப்பட கண்காட்சி

லட்சுமி யானை நினைவாக புகைப்பட கண்காட்சி

Puducherry News : புதுச்சேரியில் இறந்த லட்சுமி யானை நினைவாக புகைப்பட கண்காட்சி நடந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் புகழ்பெற்ற  மணக்குள விநாயகர் கோயில்  யானை லட்சுமி கடந்த மாதம்  இறந்தது. அதன் நினைவாக  புகைப்பட கண்காட்சி குருசுகுப்பம் ஆரோதன் ஆர்ட் கேளரியில் இன்று துவங்கியது. புகைப்பட கலைஞர் பட்டாபிராமனின் புகைப்படங்கள் கொண்ட இக்கண்காட்சியை கலை பண்பாடு துறை அமைச்சர் சந்திர பிரியங்கா துவக்கி வைத்தார். 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு  வரை லஷ்மி யானையை அவர் எடுத்த புகைப்படங்களை கொண்டு கண்காட்சியை வைத்துள்ளார்.

மேலும், தை அமாவாசை, ஆடி கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரியில் யானை பங்கேற்று பொதுமக்களுக்கு ஆசீர்வாதம் செய்வது, கடற்கரை காந்தி திடல் கலங்கரை விளக்கம் ஆகியவற்றின் பின்னணியில் யானை, யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமில் பங்கேற்று லட்சுமி திரும்பும் காட்சி, கோயில் வளாகத்தில் பக்தர்களை ஆசீர்வதிப்பது போன்ற புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இதனை வெளிநாட்டவரும் உள்ளூர் மக்களும் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

First published:

Tags: Puducherry