Home /News /puducherry /

காய்ச்சல் அதிகரிப்பு; 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட பரிந்துரை - புதுச்சேரி சுகாதார துறை

காய்ச்சல் அதிகரிப்பு; 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட பரிந்துரை - புதுச்சேரி சுகாதார துறை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகள் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry | Tamil Nadu
    புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கு அதிக அளவில் காய்ச்சல் பரவி வரும் காரணத்தால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகளை மூட சுகாதாரத் துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

    இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 10 நாட்களாக பல்வேறு காரணங்களால் 50 சதவீத குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. பல குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் அதிகமாகி உள்ளது. இந்த பாதிப்பு காரணங்களால் மருத்துவமனையில் குழந்தைகள் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட் குழந்தைகள் உடன் மற்ற குழந்தைகள் தொடர்பில் இருப்பதால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், சளி அறிகுறிகள் இருக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஏற்கனவே பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அதிகரிப்பால் மாஸ்க், சமூக இடைவெளியை பின்பற்ற நாங்கள் அறிவுறுத்தியும் பாதிப்பு அதிகரித்தே உள்ளது.

    Also Read : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது - பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவிப்பு

    இதையடுத்து சில நாட்களுக்கு 1 முதல் 8 வரையிலான வகுப்புகளை மூட அரசுக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனால் புதுச்சேரியில் குழந்தைகளுக்கான காய்ச்சல் பாதிப்பு குறையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சுகாதார துறையின் பரிந்துரையை கல்வி துறை ஏற்று 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகளை மூட ஆலோசனை செய்து வருகின்றனர்.  விரைவில் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடுவதற்கான உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: School student

    அடுத்த செய்தி