ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரி பற்றி கருத்து கணிப்பு.. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய என்.எஸ்.எஸ் மாணவர்கள்..

புதுச்சேரி பற்றி கருத்து கணிப்பு.. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய என்.எஸ்.எஸ் மாணவர்கள்..

விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

Puducherry News : புதுச்சேரி பற்றி கருத்து கணிப்பு. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த என்.எஸ்.எஸ் மாணவர்கள் பேரணி.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

இந்திய நகரங்களில் மக்களின் அன்றாட வாழ்வியல் சூழல் எந்த அளவிற்கு உகந்ததாக உள்ளது என்பதனை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நகரங்களில் வாழும் மக்களிடம் நேரடியாக கருத்துக்களைக் கேட்க முடிவு செய்து அதற்கான கணக்கெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.

2022ம் ஆண்டுக்காக வாழத் தகுதியான நகரங்களை மதிப்பீடு செய்வதற்காக இணைய வழி கணக்கெடுப்பு நவம்பர் மாதம் 9ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரி நகரம் எந்த அளவிற்கு வாழத் தகுதியுடைய நகரமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தின் மூலம் இணைய வழி கணக்கெடுப்பில் புதுவை மக்கள் பெரிதும் பங்கெடுத்துக்கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்.எஸ்.எஸ் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதையும் படிங்க : 16வது நாள் காரியத்தின் போது இறந்த லட்சுமி யானையின் கால் தடம்.. புதுச்சேரியில் பரபரப்பு

 அதன்படி கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணியை புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் செயல் தலைவர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புஸ்ஸி வீதி, அண்ணாசாலை, நேருவீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியாக சென்று இறுதியாக கடற்கரைசாலை காந்தி சிலையில் நிறைவுபெற்றது.

இந்த விழிப்புணர்வு பேரணியின்போது் புதுச்சேரி பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு பதாகைகளை ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

புதுச்சேரி செய்தியாளர் - பிரசாந்த்

First published:

Tags: Local News, Puducherry