ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் ஹெலிகாப்டர் சேவை.. சுற்றுலாவை மேம்படுத்த தமிழிசை அறிவிப்பு

புதுச்சேரியில் ஹெலிகாப்டர் சேவை.. சுற்றுலாவை மேம்படுத்த தமிழிசை அறிவிப்பு

சுற்றுலா பயணிகளை கவர இரவுநேர விமான சேவை மற்றும் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளை கவர இரவுநேர விமான சேவை மற்றும் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளை கவர இரவுநேர விமான சேவை மற்றும் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்பட இருப்பதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Puducherry (Pondicherry), India

  புதுச்சேரிக்கு கல்விச் சுற்றுலா வந்த மும்பை சத்ரபூஜ் நர்சீ பள்ளி மாணவர்கள் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை  ராஜ் நிவாசில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

  அப்போது, “ ஆளுநர் என்றால் வயதானவர் என குழந்தைகள் மனதில் இருந்தது. விமான நிலையத்தில் நான் தான் தெலுங்கானா ஆளுநர் என கூறியும் ஒரு குழந்தையும் நம்பவில்லை. பின்னர் என்னுடன் அந்த குழந்தை புகைப்படம் எடுத்த போது தானும் ஆளுநராக வர வேண்டும் என விருப்பத்தை தெரிவித்தார். உயர்ப்பதவிக்கு வர கல்வி மற்றும் பணியில் சிறப்பாக செயல்பட வேண்டும். நேர்மையாக உங்க பணிகளை செய்யுங்கள். தானாக பதவி வரும்” என கேள்வி ஒன்றிற்கு தமிழிசை பதிலளித்தார்.

  புதுச்சேரியின் சுற்றுலா வளர்ச்சிக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ...? என்ற கேள்விக்கு, புதுச்சேரியில் ஹெலிகாப்டர் சேவை துவங்கப்படும். புதுச்சேரி சுற்றுலா தளங்களை சுற்றிப் பார்க்க பேருந்து வசதி, நீர் விளையாட்டுகள், இந்திய பிரெஞ்சு கலாச்சாரம் சுற்றுலா என ஏற்படுத்தப்படும். விமானதளத்தை விரிவாக்கம் செய்யவும் இரவு சேவை துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பல மாநிலம் பல நாடுகளிலிருந்தும் பயணிகள் புதுச்சேரிக்கு வருவார்கள் என்றார்.

  புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் இரு பதவிகளை

  எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு மருத்துவரான தான் பிரசவத்தின் போது இரட்டை குழந்தைகள் பிறந்தால் என்னால் பார்க்க முடியும். அதேபோல்தான் ஆளுநர் துணைநிலை ஆளுநர் பதவிகளை பார்க்கிறேன்” என்றார்.

  Also see... சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நாளை நடைதிறப்பு.. ஆன்லைன் புக்கிங் அவசியம்.. தேவசம்போர்டின் முக்கிய அறிவிப்புகள்!

  மேலும்,” இதை கூடுதல் வேலையாக கருதவில்லை. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளேன். எதையும் சமமாக பார்ப்பேன்.நமக்கு வேண்டாதவர்கள் கோபத்தை ஏற்படுத்தினால் அதிக அளவில் சிரிப்பேன்” என  கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Pudhucherry, Puducherry Governor, Tamilisai