Home /News /puducherry /

சிகரம் விருதுகள் 2022 : புதுச்சேரி வளர்ச்சிக்கும், பெருமைக்குமுரிய சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் நியூஸ்18 !

சிகரம் விருதுகள் 2022 : புதுச்சேரி வளர்ச்சிக்கும், பெருமைக்குமுரிய சிறந்த ஆளுமைகளை கவுரவிக்கும் நியூஸ்18 !

சிகரம் விருதுகள்

சிகரம் விருதுகள்

Sigaram Award 2022 | , புதுச்சேரியில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் சிகரம் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India
    தமிழகத்தின் மகத்தான மனிதர்களை கெளரவிக்க ’மகுடம்’ விருதுகள் விழாவை ஆண்டுதோறும் நடத்தும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, புதுச்சேரியில் உள்ள மரியாதைக்குரிய மனிதர்களைப் பாராட்டும் வகையில் ஆண்டுதோறும் சிகரம் விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் சிகரம் விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    புதுச்சேரியில் தனி முத்திரைப்பதித்த திறமையாளர்களை அங்கீகரித்து கொண்டாடும் இந்த சிகரம் விருது விழாவில், சிறந்த சமூக சேவகர், விளையாட்டு வீரர், அரசுப்பள்ளி, அரசு மருத்துவர், கலைக்குழு, தொழில்முனைவோர், விவசாயி, கிராமம், விருந்தோம்பல், கல்வியாளர், ப்ரெஞ்ச் கலாச்சார மேன்மை ஆகிய பல்துறைகளில் சாதனையாளர்கள் கெளரவிக்கப்படுகின்றனர்.

    சரியான நபர்களுக்கு வழங்கப்படும்போதுதான் விருது அதன் நோக்கத்தை நிறைவு செய்கிறது. இதை மனதில் கொண்டு, எங்கள் செய்திக்குழுவினரின் தேடலோடு, பொதுமக்களிடம் இருந்தும் திறமையாளர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டன. தொகுக்கப்பட்ட தகுதி வாய்ந்த பரிந்துரைகளில் இருந்து தேர்வாளர்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது நியூஸ் 18 தமிழ்நாடு.

    இந்த விழாவில் புதுவை முதலமைச்சர் ரெங்கசாமி அமைச்சர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்துறை விருந்தினர்கள் பங்கேற்றனர்.

    சிகரம் விருதுகள் 2022 - விருதுகள் வென்றவர்கள் விவரம் 
    சிறந்த ஆசிரியர் விருது - கிருஷ்ணன்
    சிறந்த ஆசிரியர் விருது - மஞ்சுபாலா தாஸ்
    சிறந்த சமூக சேவகர் விருது - புர்னோ
    சிறந்த மருத்துவர் விருது - டாக்டர் ஆர்.வெங்கடேஷ்
    சிறந்த விளையாட்டு வீரர் – மினிமதி, (வலு தூக்கும் வீராங்கனை)
    சிறந்த அரசு பள்ளிக்கான விருது - கரிகாலம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி
    உயர் கல்விக்கான மேன்மை விருது - School of Allied Health sciences, VMRF -DU, AVMC Campus Puducherry
    சிறந்த கருத்தரிப்பு மருத்துவர் விருது - டாக்டர்.மஹாலஷ்மி
    சிறந்த ஆடையகம் - K.V. டெக்ஸ்
    சிறந்த மக்கள் சேவை விருது - டாக்டர். சந்தீப் ஆனந்த் ஜெகத்ரக்சகன்
    வாழ் நாள் சாதனையாளர் விருது - கவிஞர் வில்லியனூர் பழனி
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி