ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் - புதுச்சேரி நகராட்சி முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் - புதுச்சேரி நகராட்சி முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

Puducherry News | புதுச்சேரி நகராட்சி பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில், புத்தாண்டு தினத்தில், இ.சி.ஆர். சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர விடுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டுவது வாடிக்கை. இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கடற்கரையில் கூடி புத்தாண்டை வரவேற்று மகிழ்வதும் வழக்கம்.

இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது, சில இடங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதனால், ஆங்காங்கே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கெள்ளப்படுகின்றன.

அதேபோல, புத்தாண்டுக்கு முன்னதாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையும் ஆங்காங்கே கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், புதுச்சேரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, புதுச்சேரி நகராட்சி பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சிக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் சாரிபில் அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னர் அனுமதி பெறவேண்டும்.

Must Read : கிரக தோஷங்கள் நீங்க விழுப்புரத்தில் வழிபட வேண்டிய திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் - சிறப்புகள் என்ன?

அதற்காக புதுச்சேரி நகராட்சிக்கு 7 நாட்களுக்கு முன்பு விண்ணப்பித்து உரிய அனுமதியை பெற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

First published:

Tags: Local News, New Year Celebration, Puducherry