ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புத்தாண்டுக்கு புதிய மதுபானங்கள்... புதுச்சேரியை கலக்கப்போகும் மது பிரியர்கள்..

புத்தாண்டுக்கு புதிய மதுபானங்கள்... புதுச்சேரியை கலக்கப்போகும் மது பிரியர்கள்..

புதுச்சேரி மதுபானங்கள்

புதுச்சேரி மதுபானங்கள்

Puducherry News : புத்தாண்டுக்கு புதுச்சேரியில் புதிய ரக வெளிநாட்டு மதுபானங்கள் வந்துள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

உலகம் முழுவதும் புத்தாண்டை வரவேற்க தயாராகி வருகிறது. தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலத்தில் உள்ளோருக்கு புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் பகுதியாக புதுச்சேரி உள்ளது. குளிர்கால சீசன் என்பதாலும், புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும் பகுதி என்பதாலும் பலர் குளிர்கால விடுமுறையை புதுச்சேரியில் கழிக்கின்றனர்.

இதனால் இப்போதே புதுச்சேரியில் உள்ள பல விடுதிகள், ஸ்டார் ஹோட்டல்கள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளன. பிரெஞ்சு காலத்திலிருந்தே புதுச்சேரியில் மதுவகைகள் பிரபலமாக உள்ளது. பல வெளிநாட்டு மதுவகைகளும் இங்கே கிடைக்கும் என்பதால் மதுப்பிரியர்களின் சொர்க்க பூமியாகவும் புதுச்சேரி விளங்குகிறது.

இந்நிலையில், புதுச்சேரி மதுக்கடைகள் புத்தாண்டிற்காக அலங்கரிக்கப்பட்டு தயாராக உள்ளன. மேலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க புதிய மதுபானங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஜப்பான் விஸ்கி, மெக்சிகன் டக்கீலா, லண்டன் ஜின், இத்தாலி பீர் என வெளிநாட்டு மதுவகைகள் பல இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரி மதுபானங்கள்

இதையும் படிங்க : அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் விலை 3 மடங்கு உயர்வு

இதனால் மதுப்பிரியர்களும், சுற்றுலா பயணிகளும் புத்தாண்டை மது வகைகளுடன் கொண்டாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

செய்தியாளர் : பிரசாந்த் - புதுச்சேரி

First published:

Tags: Local News, Puducherry