ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

உருமாறிய கொரோனாவை கண்டறிய புதுச்சேரியில் புதிய ஆய்வுக்கூடம்..

உருமாறிய கொரோனாவை கண்டறிய புதுச்சேரியில் புதிய ஆய்வுக்கூடம்..

புதுச்சேரியில் புதிய ஆய்வுக்கூடம்

புதுச்சேரியில் புதிய ஆய்வுக்கூடம்

Puducherry News : உருமாறிய கொரோனாவை கண்டறிய புதுச்சேரியில் புதிய ஆய்வுக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்றுள்ளது. இது உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் உலகம் முழுவதும் 5 லட்சத்துக்கு மேற்ப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கொரோனாவின் 3வது அலை பரவியபோது உருமாறிய வகை கொரோனா உள்ளதா? என பரிசோதனை நடத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுவையில் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களது உமிழ்நீர் பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள சோதனை கூடத்திற்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை முடிவுகள் வர சில நேரங்களில் 10 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இதையும் படிங்க : பொங்கல் பரிசு அமோகம்..! வெல்லம், முந்திரி என 10 அசத்தல் பொருட்கள்... ரேசன் கடையில் விநியோகிக்க புதுச்சேரி அரசு முடிவு

இந்நிலையில், பரிசோதனை கூடம் இதற்காக புதுவையில் தனியாக பரிசோதனை கூடம் அமைக்க அரசு சுகாதாரத்துறை முடிவு செய்தது. இதற்காக ரூ.3½ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த சோதனை கூடம் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அதிநவீன பரிசோதனை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை கூடம் பணிகள் முடிவடைந்து திறப்பு விழா காண தயாராக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் புதுவையில் இந்த உருமாறிய வகை கொரோனாவை கண்டறியும் பரிசோதனை கூடத்தை திறந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதுச்சேரி செய்தியாளர் : பிரசாந்த்

First published:

Tags: CoronaVirus, Local News, Puducherry