ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை - நாராயணசாமி திட்டவட்டம்

புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை - நாராயணசாமி திட்டவட்டம்

நாராயணசாமி

நாராயணசாமி

புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியா...? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கட்சி தலைமையை கேட்டு தான் செயல்படுவோம். நாங்கள் எப்படி முடிவு செய்வோம் என கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

samiபுதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு யார் தலைமை என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக, புதுச்சேரியில் காங்கிரஸ் என்ற நிலை இருந்தாலும் திமுக மதிப்பதில்லை. போராட்டங்களில் காங்கிரஸ் முன்னிலை படுத்தப்படுவதில்லை என காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, புதுச்சேரியில்  மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்துகின்ற போராட்ட நிகழ்வுகளில் காங்கிரஸ் கட்சி தலைமை ஏற்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொல்லுகின்ற போராட்டங்களை இணைந்து செயல்படுத்துகின்றோம்.

புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டம் என்று வந்தால் காங்கிரஸ் கட்சி தான் தலைமை ஏற்கும். சமீபத்தில் நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டங்களில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக அமைப்பாளர் சிவா தலைமை ஏற்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. கூட்டணி தலைமை என்பது காங்கிரஸ் கட்சி தான். ஆனால் பத்திரிக்கை செய்திகளில் திமுக தலைமை ஏற்றதாக வந்தது. புதுச்சேரியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிக்கு காங்கிரஸ்தான் தலைமை என்றும் அப்படி ஏற்காவிட்டால் தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இதை தான் நிர்வாகிகள் கூட்டத்தில் உறுதி செய்தோம் என தெரிவித்தார்.

இதையும் படிக்க :  தமிழிசை பெயரில் அமைச்சரிடம் உதவி கேட்டு மோசடி.. புதுச்சேரியில் பரபரப்பு!

புதுச்சேரியில் காங்கிரஸ் தனித்து போட்டியா...? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “கட்சி தலைமையை கேட்டு தான் செயல்படுவோம். நாங்கள் எப்படி முடிவு செய்வோம் என கூறினார். எங்களுக்குள் மனகசப்பு இல்லை. காதல் தான் இருக்கிறது.போராட்டங்கள் தான் தனித்து என்றேன். தேர்தலில் தனித்து என கூறவில்லை என அழுத்தமாக பதிவிட்டார் நாராயணசாமி.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த 95 சதவீதம் பேரை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு அரசு வழக்கறிஞராக நியம்பித்து வந்தோம். ஆனால் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்காமல் பிறமாநிலத்தை சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

முதலமைச்சர் பரிந்துரை செய்து அனுப்பிய வழக்கறிஞர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மறுத்து விட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது புதுச்சேரி மாநிலத்தின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. இதற்கு ஆளுநர் தமிழிசை பதில் சொல்லியே ஆகவேண்டும் என முன்னாள் முதல்வர் நாரயணசாமி வலியுறுத்தினார்.

தெலுங்கானாவில் ஆளுநராகவும் புதுச்சேரியில் துனை நிலை ஆளுநராகவும் தமிழிசை நடந்து கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு அரசியல் செய்ய நினைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் செய்யட்டும் என நாராயணசாமி தெரிவித்தார்.

First published:

Tags: Narayanasamy, Puducherry, Tamilisai Soundararajan