ஹோம் /நியூஸ் /Puducherry /

புதுச்சேரியில் அதிகாலையில் சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - வீடு இடிந்தது

புதுச்சேரியில் அதிகாலையில் சத்தத்துடன் வெடித்த மர்ம பொருள் - வீடு இடிந்தது

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

புதுச்சேரியில் மர்ம பொருள் வெடித்து  ஏற்பட்ட விபத்தின் காரணமாக வீடு முழுவதும் சேதம் அடைந்ததில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

புதுச்சேரி முத்தியால்பேட்டை குடியிருப்பில் இன்று அதிகாலை மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (65). இவர் தனது மனைவி ஜோதி,(60) மகள் எழிலரசி மற்றும் பேரக் குழந்தைகள் உடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை அதிக சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததை அடுத்து ஸ்ரீனிவாசனின் வீடு முழுவதும் இடிந்து சேதமடைந்தது இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் வீட்டில் இருந்தவர்களை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் ஜோதி மற்றும் அவரது மகள் எழிலரசி ஆகியோர் அதிக தீ காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவிலும், பேர குழந்தைகள் மற்றும் அருகே இருந்த வீட்டில் வசித்த 4 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் வந்து மீட்பு பணிகளில் உதவினார்.

Also Read: சென்னை மழை வெள்ளத்தில் பாட்டுப்பாடி படகு ஓட்டி மகிழ்ந்த மன்சூர் அலிகான்

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீனிவாசனின் வீட்டில் ஒரு பகுதியில் வசித்து வரும் அவரது உறவினரான பா.ஜ.க வை சேர்ந்த சுரேஷ் என்பவர் அலுவலகம் வைத்துள்ளார். அவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பட்டாசுகள் வெடித்து தனது பிறந்த நாளை கொண்டாடிய போது அதில் ஏதாவது அலுவலகத்தில் வைத்து அது ஏதேனும் வெடித்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வீடு முழுவதும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளே செல்ல முடியாத சூழலால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளே சென்றால் தான் விபத்துகான காரணம் தெரியவரும் என தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crackers, Crime News, Pudhucherry