முகப்பு /செய்தி /புதுச்சேரி / பைக்குடன் பற்றி எரிந்த நெல் வியாபாரி.. சாவில் மர்மம்..

பைக்குடன் பற்றி எரிந்த நெல் வியாபாரி.. சாவில் மர்மம்..

Puducherry

Puducherry

Mysterious Death | இரவு உணவை தயார் செய்யுமாறு செல்போனில் கூறியவர் சிறிது நேரத்தில் யாருமில்லாத சாலையில் இரு சக்கர வாகனத்துடன் தீப்பற்றி எரிந்த நெல் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி தவளக்குப்பத்திலிருந்து மடுகரை செல்லும் சாலையில் ஞாயிற்றுகிழமை இரவில் இரு சக்கர வாகனத்துடன் சேர்ந்து ஒருவர் தீயில் எரிந்து கொண்டிருந்தார். வலது கையை நீட்டியவாரு அவரது உடல் முழுவதும் தீயில் எரிந்து கொண்டிருந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். பிறகு தவளக்குப்பம் போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் தீயில் எரிந்து இறந்தவர் கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த நெல் வியாபாரி வேணுகோபால் என்பது தெரிய வந்தது.

இரு சக்கர வாகனம் ஸ்டேண்ட் போட்டு நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும், அதன் அருகே வேணுகோபால் கையை நீட்டியவாரு தரையில் அமர்ந்திருந்த நிலையிலும் தீ எரிந்து கொண்டிருந்தது.

ஞாயிற்று கிழமை இரவு 9 மணிக்கு தவளகுப்பம்-கரிக்கலாம்பாக்கம் சமாதி பேருந்துநிறுத்துமிடத்தில் மின்சாரமில்லை. அப்போது தான் சாலையில் வாகனம் மீதும் வேணுகோபால் மீதும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

' isDesktop="true" id="780013" youtubeid="Sf5NxJR42iw" category="puducherry">

வேணுகோபாலின் மகன் ரங்கராஜ் நேரில் வந்து பார்த்து, கடற்கரைக்கு சென்று வீட்டுக்கு திரும்புகையில் போன் செய்து இரவு உணவை தயாராக வைக்க சொன்னார். அவரை யாரோ தீ வைத்து கொலை செய்து விட்டனர். தனது தந்தை தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. அவருக்கு எதிரிகள் யாருமில்லை என்றார்.

Also Read : TANSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன.?

தந்தையின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். சம்பவ இடத்தில் எரிந்த ஆக்டிவா வாகனம் சாதாரணமாக தீப்பிடிக்காது. சாட்சர்யூட் ஆனாலும் கீழே தான் முதலில் எரியும். அப்படி எரிந்தால் வாகன ஓட்டி வாகனத்தை விட்டு ஓடி இருப்பார். Stand போட்டு நிறுத்த வாய்ப்பு இல்லை என பைக் மெக்கானிக் தெரிவித்துள்ளார்.

Also Read : கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள்: தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணத்திலிருந்து விலக்கு

இரவு உணவை தயார் செய்ய கூறி வீடு திரும்பிய நெல் வியாபாரி திடீரென தீப்பிடித்து மர்மமாக இறந்துள்ள சம்பவம் புதுச்சேரியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு தான் உண்மை தெரிய வரும். இருப்பினும் சந்தேக மரணம் என தற்போதைக்கு வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்துவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Mysterious death, Puducherry