ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. நாளை முதல் புதுச்சேரியில் அமல்

பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. நாளை முதல் புதுச்சேரியில் அமல்

பால் பாக்கெட்

பால் பாக்கெட்

Puducherry News : புதுச்சேரி அரசின் பால் உற்பத்தி நிறுவனத்தின் தொடர் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் புதுச்சேரியில் பால் விற்பனை  விலையை அரசு உயர்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் அரசு  நிறுவனமான பாண்லே  மூலம் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிறுவனம் சமீபகாலமாக தொடர்  நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால் பால் விற்பனை விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்த அரசு முடிவு செய்தது.

புதுச்சேரிக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சம் லிட்டர் வரை தேவைப்படுகிறது. ஆனால் உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 40 லிட்டர் மட்டுமே பாண்லேவிற்கு  கிடைக்கிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கூடுதல் விலைக்கு பால் வாங்கப்பட்டு மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கு வாங்கி 42 ரூபாய்க்கு குறைத்து விற்கப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ஏழரை லட்சம் ரூபாய் வரை நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடந்த ஓராண்டாக பாண்லே தொடர் நஷ்டத்தில் இயங்குவதால் நஷ்டத்தை ஈடுகட்ட  பால் விலையை உயர்த்த அரசு முடிவு செய்தது. இதற்கான உத்தரவை இன்று வெளியிட்டுள்ளது. அந்த உத்தரவில் கொள்முதல் விலை லிட்டருக்கு 34ல் இருந்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் விற்பனை  விலையும் லிட்டருக்கு 4 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது. Double toned பால்  (மஞ்சள் நிற பால் பாக்கெட்) ஒரு லிட்டர்  42 ரூபாய்க்கு விற்பனைக்கு புதிதாக வருகிறது. ஏற்கனவே  42ரூபாய்க்கு விற்ற toned பால் (நீல நிற பால் பாக்கெட்) 46 ரூபாய்க்கும் Special toned பால் (பச்சை நிற பால் பாக்கெட்) 44 ரூபாயில் இருந்து 48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. standard பால் (ஆரஞ்சு நிற பால் பாக்கெட்) 48 ரூபாயில் இருந்து 52 ரூபாய் உயர்த்தப்படுகிறது. Full cream பால் (சிவப்பு நிற பால் பாக்கெட்)  என புதிதாக வரும் பால்  62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அரசின் பாண்லே நிறுவனம் அறிவித்துள்ளது.

First published:

Tags: Cow Milk, Milk, Milk Production, Puducherry, Tamil News