குடித்து ஜாலியாக இருக்க மோட்டார் சைக்கிள்களை திருடும் மருத்துவ உதவியாளர்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்
குடித்து ஜாலியாக இருக்க மோட்டார் சைக்கிள்களை திருடும் மருத்துவ உதவியாளர்.. ரூ.5 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல்
இரு சக்கர வாகங்களை திருடியவர் கைது
மது அருந்தி மகிழ்ச்சியாக இருப்பதற்காக 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 மோட்டார் சைக்கிள்களை திருடி மொத்தமாக விற்க வீட்டில் சேமித்து வைத்த போது சிக்கியுள்ளார்.
மது அருந்தி மகிழ்ச்சியாக இருக்க மோட்டார் சைக்கிள்களை திருடும் மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுச்சேரியில் சமீபகாலமாக இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க எஸ்.பி உத்தரவிட்டிருந்தார். அதன்படி போலீசார் இரவு பகல் என்று அதிரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி திருபுவனை போலீசார் மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞரை மடக்கி போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் விழுப்புரத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர் ஒதியன் சாலை, பெரியகடை, கிருமாம்பாக்கம், உருளையன்பேட்டை, உள்ளிட்ட காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிளை திருடி அவற்றை விற்காமல் மொத்தமாக வீட்டில் சேமித்து வைத்தது தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் வெங்கடேசன் இவற்றை கூட்ட நெரிசல் அதிகம் உள்ள சந்தை மற்றும் மதுபார்களை ஒட்டியுள்ள பகுதிகளில் திருடுவதை வாடிக்கையாக கொண்டவர். மேலும் இவர் பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியை செய்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கடலூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாக கம்பவுண்டர் (மருத்துவ உதவியாளர்)ஆக வேலை செய்து வந்துள்ளார்.
மேலும் குடிக்கு அடிமையானதால் பணிக்கு செல்லும்போது குடிபோதையில் சென்று வந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில் செலவுக்கு பணம் இல்லாத காரணத்தினால் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் இவரது தொடர் திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய மற்ற வழக்குகளின் எண்ணிக்கை 10. மது அருந்தி மகிழ்ச்சியாக இருப்பதற்காக 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 மோட்டார் சைக்கிள்களை திருடி மொத்தமாக விற்க வீட்டில் சேமித்து வைத்த போது சிக்கியுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.