தமிழர்களின் பாரம்பரியத்தில் தற்போது அழிந்து வரும் ஒரு விளையாட்டில் மாவளியும் ஒன்று. நமது வட்டார வழக்கில் கார்த்திகை மாவளி என்று கூறுவார்கள். கார்த்திகை தீப நாளில் மாவளி சுற்றுதல் என்ற விளையாட்டு நிகழும். அதற்கு பணம் பூ தான் உதவுகிறது. நமது வட்டார மொழியில் இதனை குக்கான் என்றும் அழைப்பார்கள். அதனுடன் சவுக்கை மரத்தின் காய்ந்த காய்களையும் பயன்படுத்துவார்கள்.
இன்றைக்கு உள்ள சிறார்களுக்கு இந்த விளையாட்டெல்லாம் தெரியாது. இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக புதுச்சேரியில் லாஸ்பேட்டை விமான நிலையம் அருகே ஹெலிகாப்டர் தளத்தில் மாவளி திருவிழா நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று மாவளி சுற்றினார்கள்.
இவர்களில் ஆர்வத்துடன் பெண்களும் பங்கேற்றனர். இனி ஆண்டுதோறும் அரசின் அனுமதி பெற்று கார்த்திக்கை தீபத்தன்று மாவளி திருவிழா நடத்தப்படும் என விழா ஏற்பாட்டாளர் திருமுருகன் கூறினார்.
மாவளி செய்வது எப்படி?
மாவளி தயாரிக்க பணம் பூவினையும் கூக்கான் மற்றும் சவுக்கை பூவையும் நன்கு காய வைத்து காற்று புகாமல் பள்ளத்துக்குள் வைத்து தீட்டு பின்பு அந்த தனல் மீது பச்சைத் தழைகளை போட்டு மணற்பரப்பி மூடி வைப்பார்கள் அடுத்த நாள் பள்ளத்தை நோண்டி நன்கு கரியாக்கிய கூக்கான எடுத்து அதை நன்கு அம்மியில் வைத்து அரைத்து பழைய காட்டன் புடவைகள் அல்லது துணிகளில் சிறிய அளவாக கிழித்து எடுத்து அம்மியில் அரைத்த குக்கான் கறி துகள்களை துணியில் பரப்பி அதை சுருட்டி கட்டுவார்கள்.
அடுத்து நன்கு முற்றாத மெலிதான பனை ஓலை மட்டைகளை எடுத்து அதை மூன்று பாகமாக நடப்பகுதியில் கிழித்து அதன் நடுவில் கரித்துள் சுற்றிய பந்தை கட்டுவார்கள். பிறகு அதை உரியைப் போல் நீண்ட கயிற்றில் பிணைப்பார்கள். கார்த்திகை தீப நாளில் ஒவ்வொரு வீடுகளிலும் மாலை நேரத்தில் தீபமேற்றி கடவுளுக்கு படைக்கும் போது முதல் நாள் தீபம் அண்ணாமலையார் தீபம் என்று அழைப்பார்கள்.
அன்று வீட்டில் சைவ உணவுகள் சமைத்து மாவிளக்கு செய்து கார்த்திகை பொரி செய்து மாவளியை வைத்து படையல் இடுவார்கள். மாவளியில் துணி பந்தில் நெருப்பை வைத்து கனலை ஏற்படுத்துவர்.
Also see... இன்று கார்த்திகை பௌர்ணமி.. திருவண்ணாமலையில் 2-வது நாளாக மக்கள் கிரிவலம்!
கயிற்றைப் பிடித்து மட்டமாகவும் பக்கவாட்டிலும் இளைஞர்கள் பெரியவர்கள், சிறார்கள் சுற்றுவர். மாலை நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் அது தீப்பொறியினை சிதற விட்டு எரி நட்சத்திரம் வேகமா சூழ்ந்து ஓடினால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அபூர்வாட்சியாக இருக்கும். மாவளி சுற்றும் போது மாவளியோ மாவளி என்று சத்தமிடுவர்.
மாவளி பயன்கள்
நமது வட்டார வழக்கில் கார்த்தி கார்த்தி கம்மங் கார்த்தி என்று கூறுவார்கள். மாவளி பயன்கள் சுற்றுச்சூழல் மாசற்ற இயற்கை கரி மருந்து பார்ப்பவர்களுக்கு ஆனந்தத்தையும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடியது . முற்றிலும் பாதுகாப்பானது. தீக்காயம் ஏற்பட வாய்ப்புகள் மிக மிக குறைவு, வீட்டிலேயே செலவு இல்லாமல் செய்யப்படும் வானவேடிக்கை.
மாவளியை தமிழரின் கலையை மிகப்பெரிய அளவில் திருவிழாவாக அனைவரும் பயன்படுத்த முன்னெடுத்து வரவேண்டும். தமிழரின் இயற்கை வான வேடிக்கையை உலகறிய செய்வது தமிழர்களாகிய நமது கடமை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Karthigai Deepam, Puducherry