ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் விலை 3 மடங்கு உயர்வு

அதிகரிக்கும் கொரோனா... மாஸ்க் விலை 3 மடங்கு உயர்வு

mask

mask

Mask Price | புதுச்சேரியில் மீண்டும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் முக கவசத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. பல இடங்களில் ஸ்டாக் இல்லை என கூறப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கோவிட் 19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நோய் தொற்றை தடுக்கும் விதமாக முக கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் முக கவச விற்பனை பெருமளவில் இருந்தது. நோய் தொற்று குறைவை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து முக கவசம் அணிவதை மக்கள் படிப்படியாக கைவிட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் கொரோனா தலை தூக்க துவங்கி உள்ள நிலையில் புதுச்சேரி அரசு கொரோனா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடும் பொழுது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில் முக கவசத்தின் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

60 ரூபாய்க்கு விற்ற முகக்கவசம் அடங்கிய பாக்கெட் 150 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கு விற்ற மாஸ்க் 170 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சிறு வியாபாரிகள் கேட்டால் ஸ்டாக் இல்லை என கூறப்படுகிறது. ஸ்டாக் வந்தால்தான் புதிய விலையை சொல்ல முடியும் என கூறுவதால் விலையை மேலும் ஏற்றுவதற்காக தான் ஸ்டாக் இல்லை என கூறுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசு முகக்கவச விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக இருக்கிறது..

செய்தியாளர்: இளவமுதன், புதுச்சேரி

First published:

Tags: Mask, Puducherry