ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

வாக்கிங் சென்றபோது மயக்கம்.. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு!

வாக்கிங் சென்றபோது மயக்கம்.. புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு!

யானை உயிரிழப்பு

யானை உயிரிழப்பு

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மயங்கி விழுந்து உயிரிழந்தது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் யானை இன்று அதிகாலை உயிரிழந்தது. நடைபயிற்சிக்காக ஈஸ்வரன் கோவில் அருகே சென்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்ததாக யானை பாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானை லட்சுமியின் இதயத்தில் ஏதேனும் கோளாறு இருந்திருக்கலாம் என உடலை ஆய்வுக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி, ஈஸ்வரன் கோயிலில் உள்ள தனது தங்கும் இடம் பகுதியில் இருந்து காலை 6 மணிக்கு தினமும் வாக்கிங் செல்வது வழக்கம். அதுபோல இன்றும் அதிகாலையில் யானை லட்சுமி தனது பாகனுடன் சென்றுள்ளது. அப்போது வாக்கிங் வந்த யானை மிஷன் வீதி கலவை கல்லூரி அருகே 6:30 மணிக்கு திடீரென சாலையில் சுருண்டு விழுந்து இறந்தது. அப்படி மயங்கி விழுந்தபோது அதன் அருகில் நின்ற காரின் மீது விழுந்து சாலையில் சாய்ந்துள்ளது. இதில் அந்த கார் சேதமானது.

புதுச்சேரிக்கு 1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்ட யானை லட்சுமிக்கு தற்போது 33 வயதை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இறந்த யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர். பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்பு

Also see...  திருவண்ணாமலையில் கிரிவலம்: முக்கிய அறிவிப்பு

கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி பக்தர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யானை இறந்த பகுதிக்கு புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சார சாரையாக வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.

First published:

Tags: Elephant, Puducherry