ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

சிசிடிவி இல்லாத பகுதிகளில் நோட்டமிட்டு பைக் திருட்டு - புதுச்சேரியில் சிக்கிய பலே திருடன்

சிசிடிவி இல்லாத பகுதிகளில் நோட்டமிட்டு பைக் திருட்டு - புதுச்சேரியில் சிக்கிய பலே திருடன்

குற்றவாளியை பிடித்த போலீசார்

குற்றவாளியை பிடித்த போலீசார்

சிசிடிவி கேமிரா இல்லாத கிராம புற பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

சிசிடிவி இல்லாத பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருடும் பிரபல  திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (25), வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது இருசக்கர வாகனம் வீட்டு வாசலில் இருந்து  கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடு போனது. இது தொடர்பாக  வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இதையும் படிக்க : சிசிடிவி இல்லாத பகுதிகளில் இருசக்கர வாகங்கலை திருடியவர் கைது

சுற்றுபகுதியில் சிசிடிவி இல்லாததால் காவல்துறைக்கு துப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் குறிப்பிட்ட நேரம், நாள் என கணக்கிட்டு போலீசார் வேறு இடங்களில் உள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்தனர். இதில் வெள்ளை சட்டையில் ஒருவர் வாகனத்தை தள்ளி செல்வது தெரியவந்தது. அந்த காட்சிகளை ஆய்வு செய்ததில் இருசக்கர் வாகன திருட்டில் ஈடுப்பட்டது விழுப்பரம் மாவட்டம் வி.மருதுவை சேர்ந்த பிரபல இருசக்கர வாகன திருடன் அப்பு  என்ற வெங்கடேசன் என தெரியவந்தது.

அவர் சிசிடிவி இல்லாத பகுதிளை நோட்டமிட்டு திருடும் பழக்கம்கொண்டவர். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வில்லியனூர் பைபாஸ் சாலையில் வில்லியனூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்த போது அவ்வழியே திருடப்பட்ட  இருசக்கர வாகனத்தில் வந்த வெங்கடேசனை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். உரிய முறையில் விசாரணை மேற்கொண்டதில், புதுச்சேரி நகர பகுதியில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்தது தெரிய வந்தது.

சிசிடிவி கேமிரா இல்லாத கிராம புற பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவித்தார். தொடர்ந்து மேலும் அவரிடம் இருந்த இரண்டு திருடப்பட்ட வாகனங்கள் என மூன்று இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Published by:Raj Kumar
First published:

Tags: Bike Theft, Puducherry, Theft