ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

’வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை’ - வேலை தேடுபவர்களை குறிவைத்து ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

’வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை’ - வேலை தேடுபவர்களை குறிவைத்து ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது..!

புதுச்சேரி - பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

புதுச்சேரி - பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் கைது

cheating case | பிரான்சில் வேலை வாங்கி தருவதாக கூறி 500 ரூபாய்க்கு விளம்பரம் செய்து 25 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் 9 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 37). இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவருடன் வேலை பார்த்த செவ்வேல் பிரான்ஸ் நாட்டுக்கு  வேலை செல்வவதாக கூறியுள்ளார். இதனையடுத்து ராஜேஷ் தன்னையும் பிரான்ஸ் அழைத்து செல்லுமாறு செவ்வேலிடம் கூறியுள்ளார். உடனே செவ்வேல் அவரை சின்ன கொசப்பாளையம் ஏழை மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஸ்டாலின் (35) என்பவரிடம் அழைத்து சென்றுள்ளார்.

ஸ்டாலின் ராஜேசுக்கு பிரான்சில் துப்புரவு பணியாளராக வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்டுள்ளார். அதன்படி 4 தவணையாக ரூ.1,20,000 பணம் கொடுத்துள்ளார். ஒரு வாரம் கழித்து தன்னை வந்து பார்க்குமாறு ஸ்டாலின் கூறியதால் 1 வாரம் கழித்து சென்று பார்த்தபோது அவரது அலுவலகம் பூட்டப்பட்டு இருந்துள்ளது. அவரது செல்போனும் துண்டிக்கப்பட்டிருந்தது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ்  மற்றும் அவரை போன்ற சிலர் ஆவேசத்துடன் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட அனைவரும் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். ஆய்வாளர்  பாபுஜி வழக்கு பதிவு செய்து ஸ்டாலினை தேடி வந்தார்.

இந்நிலையில், சென்னையில் பதுங்கி இருந்த ஸ்டாலினை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், உள்ளூர் பத்திரிகையில்," வெளிநாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை"  என குறைந்த கட்டணத்தில் என விளம்பரம் கொடுத்துள்ளார். இதனை நம்பி 25க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல 25 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர்.

இதனை  பெற்றவுடன் ஸ்டாலின் தலைமறைவாகி விட்டார். மார்ச் மாதம் முதல் அவரை தேடி வந்த போலீசார் அவரது பழைய செல்போனை கொண்டு சென்னை எண்ணூரில் கைது செய்தனர். மோசடி செய்து சுருட்டிய பணத்தை வீட்டு செலவுக்கும் புதிதாக வேறு ஊரில் தனது போலி நிறுவனத்தை துவங்க திட்டமிட்டபோது போலீசில் சிக்கியுள்ளார்.

Also see... பயண பாஸ் இருந்தும் மாற்றுத்திறனாளியை கீழே இறக்கி விட்ட நடத்துநர்..!

ஸ்டாலினை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெளிநாட்டு மோகம், அதிக வருமானம் என பேராசையால் போலி நிறுவனங்களை நம்பி லட்சக்கணக்கில் இழக்கும் இளைஞர்களால்தான் இப்படிப்பட்ட  போலி நபர்கள் உருவாகிறார்கள் என காவல் துறை எச்சரித்துள்ளது.

Published by:Vaijayanthi S
First published:

Tags: France, Job, Puducherry