“கையெழுத்து எங்கே? யுவர் ஆனர் அதுதான் கையெழுத்தே” | திகைத்துப்போன நீதிபதிகள்!
“கையெழுத்து எங்கே? யுவர் ஆனர் அதுதான் கையெழுத்தே” | திகைத்துப்போன நீதிபதிகள்!
இதுதான் கையெழுத்தா? திகைத்த நீதிபதிகள்!
திகைத்துப்போன நீதிபதிகளுக்கு “உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலேயே அவர் அப்படித்தான் கையெழுத்திட்டுள்ளார்” என வழக்கறிஞர் கூறிய பதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான வழக்கு விசாரணையின்போது பிராமண பத்திரத்திலிருந்த கையெழுத்தைப் பார்த்து நீதிபதிகள் திகைத்துப்போய் விட்டனர்.
புதுச்சேரியில் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்தப்படுவது குறித்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது அம்மாநில தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸ் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அவருடைய கையெழுத்து இல்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
புதுச்சேரி தேர்தல் ஆணையர் ராய் பி தாமஸின் கையெழுத்து.
கையெழுத்துகள் இருக்க வேண்டிய இடங்களில் எல்லாம் வெறும் கிராஸ் மார்க் மட்டுமே உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்குத் தேர்தல் ஆணையத்தின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் சந்திரசேகரன், “அதுதான் அவருடைய கையெழுத்து யுவர் ஆனர்.” எனக் கூறினார்.
திகைத்துப்போன நீதிபதிகளைக் கண்டு மேலும் “உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்திலேயே அவர் அப்படித்தான் கையெழுத்திட்டுள்ளார்” எனச் சந்திரசேகரன் விளக்கினார்.
எவ்வளவு முறைக் கூறியும் அந்த கையெழுத்தை அவர் மாற்றிக்கொள்ளவில்லை எனவும் வழக்கறிஞர் தரப்பில் எடுத்துக்கூறப்பட்டது. இதனால் சிரிப்போடு அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்பு ஜூன் 21-ம் தேதிக்குள் எதிர் பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
Follow @ Google News:கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.