முகப்பு /செய்தி /புதுச்சேரி / கார்கில் வெற்றி தினம்... புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை

கார்கில் வெற்றி தினம்... புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை

தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை

தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை

Kargil Victory Day : புதுச்சேரியில் கார்கில் வெற்றி தினம் கடற்கரை சாலை போர்வீரர் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

கார்கில் வெற்றி தினம் புதுச்சேரி அரசின் செய்தி துறை சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. கடற்கரை சாலைபோர்வீரர் நினைவிடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், முப்படையினர் முதலில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். தொடர்ந்து துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து,  முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, சாய் சரவணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்எல்ஏக்கள் ஏ.கே.டி. ஆறுமுகம், பாஸ்கர், கே.எஸ்.பி. ரமேஷ், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜீவ் வர்மா, காவல் துறை தலைவர் மனோஜ்குமார் லால்ஆகியோர்மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், நாட்டின் 15 ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரௌபதி முர்மு அவர்களுக்கு புதுச்சேரி அரசு சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு வந்திருக்கிறேன். இந்தியாவில் மிகப் பெரிய சமூகப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒரு தலைவர் இன்று குடியரசுத் தலைவராக முடியும் என்றால் அதுவே இந்திய குடியரசின் மாண்பு.

இதனை நடத்திக் காண்பித்த பாரத பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டும். திரௌபதி முர்மு போன்றவர்கள் குடியரசுத் தலைவராக வந்திருக்கும் போது அடித்தட்டில், மிகவும் பின்தங்கிய, கிராமங்களில் படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூட மிகப் பெரிய நம்பிக்கை வரும். அதனால் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று கார்கில் வெற்றி தினம். அனைவரும் ராணுவ வீரர்களையும் நமது வெற்றி தினங்களையும் கொண்டாடிப் பழக வேண்டும். அதனால் தான் மூவர்ண கொடி குழந்தைகள் மனதிலும் இளைஞர்கள் மனதிலும் பதிய வேண்டும் என்பதற்காக இல்லாம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதனை மாநில அரசும் நடைமுறைப்படுத்த இருக்கிறது.

கார்கில் வெற்றி தினம்

Must Read : அப்பாவை நான் சமாதானப்படுத்துறேன்.. நம்பி வந்த மகள்..கொன்று பழித்தீர்த்த தந்தை - கோவில்பட்டி கொடூரம்

ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும். இதை தீர்க்கமாக முன்னெடுத்துச் செல்லலாம் என்று இருக்கிறோம். இல்லம் தோறும் தேசியக்கொடி என்ற திட்டம் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும்.

top videos

    தேசியய் கொடியை இரவில் ஏற்றக்கூடாது என்பார்கள். இந்த திட்டத்தின் மூலம் வீடுகளில் ஏற்றப்படும் கொடி இரவிலும் அங்கேயே பறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நமது தேசியக்கொடி எல்லா இல்லங்களிலும் பட்டொளி வீசி பறக்கும்போது இந்த சுதந்திர தினம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்தார்.

    First published:

    Tags: Kargil War, Puducherry, Tamilisai Soundararajan