ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

அரசு ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி.. இனி லேட்டா வந்தா ஆக்‌ஷன்தான் - அதிரடி உத்தரவு

அரசு ஊழியர்களுக்கு கிடுக்குப்பிடி.. இனி லேட்டா வந்தா ஆக்‌ஷன்தான் - அதிரடி உத்தரவு

புதுச்சேரி

புதுச்சேரி

 அரசு ஊழியர்கள் தாமதாக வந்தால் இனி ஒழுங்கு நடவடிக்கை என அனைத்து துறை செயலர்களுக்கு புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் காலை 8.45 மணிக்கு துவங்கும். ஊழியர்கள் நேரத்தோடு வர வேண்டும் என்பது விதி. ஆனால் புதுச்சேரியில் கடந்த 10 ம் தேதி வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையான சாரத்தில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் காலை 9.45 மணி வரை ஒருவர் கூட வரவில்லை. இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த சமூக ஆர்வலர் ரகுபதி, இந்த செய்தியானது நியூஸ்18 தமிழ்நாடு சேனலில் வெளியானது.

இதன் எதிரொலியாக சபாநாயகர் செல்வம் தலைமை செயலர் ராஜீவ் வர்மாவிடம்  வீடியோவை காண்பித்து நேரத்தோடு பணிக்கு வராத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அரசு ஊழியர்கள் காலத்தோடு பணிக்கு வர வேண்டும். இதை மீறுவது தவறு. போக்குவரத்து துறையில் ஊழியர்கள் வராதது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகரிடம் உறுதியளித்தார்.

இதனையடுத்து தீபாவளி விடுமுறைகள் வந்தன. விடுமுறை முடிந்து கடந்த 25 ம் தேதி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் காலை 10 மணி வரை ஒருவரும் வரவில்லை என்ற வீடியோ வெளியானது. இந்த நிலையில் அனைத்து அரசு துறை செயலர்கள் மற்றும் துறை தலைவர்களுக்கு அரசின் சிறப்பு செயலர் கேசவன் சுற்றறிக்கை  அனுப்பியுள்ளார்.

Also see... 111.2 அடி உயரம் கொண்ட மஹாசிவலிங்கம்.. வேர்ல்ட் ரெக்கார்ட் யூனியன் சான்றிதழை பெற்ற சிவ பார்வதி கோவில் லிங்கம்

அதில், “ அரசு ஊழியர்கள் பணிக்கு தாமதமாக வருவதாகவும், பணி நேரத்தில் இருக்கையில் இருப்பதில்லை எனவும் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் பணியிடத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அது சட்டப்படி குற்றம்.அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்கள் தங்கள் துறைகளில் திடீரென்று ஆய்வு செய்து ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வருகிறார்களா..? பணி நேரத்தில் இருக்கிறார்களா..? என்பதை ஆராய வேண்டும். ஆய்வுக்கு பின் எத்தனை அதிகாரிகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற விவரத்தை மாதந்தோறும் சமர்பிக்க வேண்டும். இதேபோல் நிர்வாக சீர்த்திருத்ததுறையும் திடீர் ஆய்வில் ஈடுபடும்" என்று தெரிவித்துள்ளார்.

Published by:Vaijayanthi S
First published:

Tags: Government Employees, Puducherry