ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்!

புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்!

யானை உயிரிழப்பு - கதறி அழும் மக்கள்

யானை உயிரிழப்பு - கதறி அழும் மக்கள்

யானை லட்சுமி உயிரிழந்ததை அறிந்த புதுச்சேரி மக்கள் ஆயிரகணக்கானோர் கூடி யானையின் அருகில் நின்று கதறி அழும் காட்சிகள் வெளியாகி மனதை உருக வைத்துள்ளன

  • Local18
  • 2 minute read
  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரியின் புகழ் பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் வளர்க்கப்பட்டு வந்த யானை லஷ்மி இன்று காலை நடை பயிற்சி போது திடீரென மயங்கி விழுந்து இறந்தது. இதனை நடை பயிற்சிக்கு கொண்டு வந்த யானை பாகன் சக்திவேல் நடைபயிற்சிக்கு வரும்போது யானை திடீரென்று நடை தடுமாறி அருகிலுள்ள ஒரு கார் மீது இடித்து தந்தத்தால் காரை குத்தி மயங்கி விழுந்தது என தெரிவித்துள்ளார்.

Also see... திருப்பதி தரிசன நேரத்தில் மாற்றம்... டிசம்பர் முதல் அமலாகும் புதிய விதி!

இறந்த யானையை பரிசோதித்த மருத்துவர்கள் இதய அடைப்பு ஏற்பட்டு திடீரென இருந்திருக்கலாம் என கூறினர். பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் யானை தினமும் காலை மாலை இருவேளை கோவிலில் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி வந்தது. கோவில் யானை திடீரென இறந்த சம்பவம் புதுச்சேரி பக்தர்கள் மட்டுமல்லாமல் பிற மாநில பக்தர்களையும் வெளிநாட்டு வாழ் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

யானை இறந்த பகுதிக்கு புதுச்சேரியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சார சாரையாக வந்து பார்த்த வண்ணம் உள்ளனர். இதில் பொது மக்களும் பக்தர்களும் கதறி அழும் கட்சிகள் மனதை உருக்கும் வகையில் இருக்கிறது.

இந்த யானை லட்சுமி புதுச்சேரிக்கு 1998ம் ஆண்டு ஐந்து வயதில் அழைத்துவரப்பட்டது. தற்போது 33 வயதை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also see... சபரிமலையில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலுமாக தடை...

இந்நிலையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி மறைவிற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”நம் புதுவையில் அருள்மிகு மணக்குள விநாயகரை தொழ வருபவர்களின் தோழியான லட்சுமி யானை இன்று இல்லை என்று நினைத்து வருந்துகிறேன். மணக்குள விநாயகர் திருக்கோவிலுக்கு வருபவர்களிடம் தோழியாக, சகோதரியாக ஆசிர்வாதம் செய்தது இன்னும் மனக்கண்ணில் நிழலாடுகிறது. மணக்குள விநாயகர் தேர் வரும்போது தேர் போன்றே கம்பீரமாக அந்த பிரகாரத்தில் தேரை வழிநடத்தி செல்வாள். எங்களை எப்படி தேற்றிக்கொள்வதே என்று தெரியவில்லை.

லட்சுமி யானையை இழந்து வாடும் புதுவை மக்களுக்கும், வெளியூரிலிருந்து வந்து அன்போடு பழகியவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Dead, Elephant, Puducherry