முகப்பு /செய்தி /புதுச்சேரி / ரூ.1200 செலவில் பயோ கேஸ் உற்பத்தி.. காரைக்கால் பெண் பட்டதாரி அசத்தல்..!

ரூ.1200 செலவில் பயோ கேஸ் உற்பத்தி.. காரைக்கால் பெண் பட்டதாரி அசத்தல்..!

ரூ.1200 செலவில் பயோ கேஸ் உற்பத்தி செய்த ஜனனி...

ரூ.1200 செலவில் பயோ கேஸ் உற்பத்தி செய்த ஜனனி...

Puducherry | காய்கறி கழிவுகளை தனது மாடி தோட்டத்திற்கு  இயற்கை உரமாக பயன்படுத்துவதாகவும் இந்த உரம் நல்ல பூச்சிக்கொல்லியாக செயல்படுவதாகவும் பட்டதாரி ஜனனி தெரிவிக்கிறார் |

  • Last Updated :
  • Puducherry (Pondicherry), India

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தில்  கோட்டுச்சேரி சேனியர் குளத்து வீதி பகுதியை சேர்ந்தவர்  ஜனனி. இவர் திருநள்ளாறு செருமாவிலங்கை பகுதியில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.எஸ்.சி அக்ரி முடித்துள்ளார். தான் படித்த படிப்பை உபயோகமாக பயன்படுத்த எண்ணிய அவர் தனது வீட்டு மாடியில் தோட்டம் அமைத்தார்.

அத்துடன் நின்று விடாமல் வீட்டில் தினசரி பயன்படுத்தப்படும் காய்கறிகளில் இருந்து வீச வேண்டிய கழிவுகளை பயோ கேஸாக மாற்றி அதை சமையலுக்கு பயன்படுத்தலாம் என்று எண்ணி பயோ கேஸ் பிளாண்ட் ஒன்றை தனது வீட்டிலேயே தயார் செய்துள்ளார்.

தினசரி வீட்டில் சேரும் காய்கறி உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை 200 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய கேனில் சேமித்து, அந்த கேனிலிருந்து உருவாகும் பயோ கேஸை குழாய் மூலம் பழைய லாரி ட்யூப்களை கொண்டு ஒரு சேர அடுக்கி ஒவ்வொன்றையும் குழாய் மூலம் இணைத்து,  இந்த லாரி ட்யூப்-களில் அந்த பயோ கேஸை சேமித்து லாரி ட்யூப்களிலிருந்து வரும் பயோகேஸை நேரடியாக சமையல் அறையில் உள்ள அடுப்பில் இணைத்துள்ளார்.

அதன் மூலம் வீட்டில் அன்றாட சமையலை செய்து வருகிறார். அந்தப் பெரிய கேனில் இருந்து வெளியாகும் கழிவுகளை தனது மாடி தோட்டத்திற்கு  இயற்கை உரமாக பயன்படுத்துவதாகவும் இந்த உரம் நல்ல பூச்சிக்கொல்லியாக செயல்படுவதாகவும் பட்டதாரி ஜனனி தெரிவிக்கிறார்.

இந்த பயோ கேஸ் பிளாண்ட்டை அமைப்பதற்கு ரூபாய் 1200 மட்டுமே செலவு செய்ததாகவும்,  கடந்த ஏழு மாதங்களாக இந்த பயோகேசை பயன்படுத்தி சமைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மாடி தோட்டத்தில் வீட்டுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிட்டு பயன்படுத்தி வருவதாகவும், டிராகன் ஃப்ரூட் எனப்படும் மலைப்பகுதிகளில் விளையும் இந்த பழவகையை மாடித் தோட்டத்தில் பயிரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Also see...இன்று கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

top videos

    இந்த மாணவியின் முயற்சி பல  இல்லத்தரசிகளை  கவர்ந்து ஈர்த்துள்ளது. பலரும் இதே பாணியில் தங்களது வீட்டில் பயோ கேஸ் உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Karaikal, Puducherry