ஹோம் /நியூஸ் /புதுச்சேரி /

2023 சனிப்பெயர்ச்சி குறித்த பக்தர்களின் குழப்பத்தை போக்கிய திருநள்ளாறு கோயில் நிர்வாகம்

2023 சனிப்பெயர்ச்சி குறித்த பக்தர்களின் குழப்பத்தை போக்கிய திருநள்ளாறு கோயில் நிர்வாகம்

சனிப்பெயர்ச்சி

சனிப்பெயர்ச்சி

Sanipeyarchi 2023 : சனிப்பெயர்ச்சி குறித்த பக்தர்களின் குழப்பத்தை போக்கி திருநள்ளாறு கோவில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Karaikal, India

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீதர்பாரணேஸ்வரர் தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சனிப்பெயர்ச்சியின்போது தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாருக்கு வந்திருந்து நலங்குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை எள்தீபம் ஏற்றி வணங்கி செல்வார்கள். மேலும் சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக 48 நாட்களும் சனிப்பெயர்ச்சி முடிந்து 48 நாட்களும் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில், 2023ம் ஆண்டிற்கான சனி பெயர்ச்சியானது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 17ம் தேதி மாலை 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி  மார்ச் மாதம் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார் எனவும் இருவிதமாக தேதிகளில் சனி பெயர்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த குழப்பத்தை போக்கும் வகையில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோயில் கட்டளை தம்பிராயன் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “திருநள்ளாறு கோயில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது வரும் (மார்கழி மாதம்) டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

அப்போது சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். திருநள்ளாறு ஆலயத்தில் சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை சோபகிருது வருடத்திற்கான வாக்கிய பஞ்சாங்கம் தைபூச நாளில் வெளிவர உள்ளது. அது வெளி வந்தவுடன் துல்லியமாக தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர். இதனால் திருநள்ளாறு கோயிலில் சனி பெயர்ச்சி எப்போது நடைபெற உள்ளது என்பதில் பக்தர்களுக்கு இருந்த குழப்பம் தீர்ந்துள்ளது.

செய்தியாளர் : பாலமுத்துமணி - திருநள்ளாறு

First published:

Tags: Karaikal, Local News, Puducherry