முகப்பு /செய்தி /புதுச்சேரி / துபாய்க்கு ஓட்டலில் நடனமாட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... உடலை மீட்டு தர உறவினர்கள் கோரிக்கை

துபாய்க்கு ஓட்டலில் நடனமாட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு... உடலை மீட்டு தர உறவினர்கள் கோரிக்கை

2வது படம்: துபாயில் உயிரிழந்த பெண்

2வது படம்: துபாயில் உயிரிழந்த பெண்

Dancer Died in Dubai | கடந்த இரு தினங்களுக்கு முன்பாக குடும்பத்தினரை தொடர்பு கொண்ட அருணா சில நாட்களில் வீடு திரும்புவதாகவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்து இருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karaikal, India

காரைக்காலில் இருந்து துபாய்க்கு ஓட்டலில் நடனமாடுவதற்காக சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி காரைக்கால் மாவட்டம் கீழ காசாக்குடி கிராமத்தை  சேர்ந்த தேவதாஸ். இவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் உள்ளூர் மற்றும் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு  நடனமாடி வந்துள்ளனர். இந்த நிலையில் தேவதாசின்  இரண்டாவது மகள் அருணா ( வயது 32) திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ள நிலையில் சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு மூலமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம்  துபாயில் உள்ள அபுதாபிக்கு வேலைக்கு சென்றுள்ளார்.  அங்குள்ள  ஓட்டலில் நடனமாடி வந்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வீட்டில் உள்ளவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து வீடு திரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அருணா கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் அவருடன் நடனம் ஆடிய தோழிகள் அருணா உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்து விட்டதாக குடும்பத்தாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரை சந்தித்து  துபாயில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகவும்,  அருணாவின் உடலை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தனர்.

First published:

Tags: Dubai, Karaikal, Puducherry